Sunday, November 18, 2012

காற்றாடிமலைக் கடிதங்கள்

காற்றாடிமலைக் கடிதங்கள்

(இறை ஊழியர் தேவசகாயத்தின் வாழ்வும், பணியும்) 


நூல் விபரம்

பெயர் : காற்றாடிமலைக் கடிதங்கள்
(இறை ஊழியர் தேவசகாயத்தின் வாழ்வும், பணியும்)
ஆசிரியர்கள் : வெனிஷ், அருளன், பெரி.
முதல் பதிப்பு : சனவரி 2011
படிகள் : 1000
மொழி : தமிழ்
வகை : வாழ்க்கை வரலாறு
நூ-ன் அளவு : 1/8 டெம்மி
தாளின் தன்மை : மேப்-த்தோ
அச்சுக் கோர்வை : கல்லூரி அச்சகம்,
முளகுமூடு - 629 167.
அச்சாக்கம் : பிரிண்ட் பாயின்ட்,
நாகர்கோவில்.
முகப்பு வடிவமைப்பு : திரு. -யோ ராய், நாகர்கோவில்.
மொத்த பக்கங்கள் : 112
வெளியீடு : அனல் வெளியீட்டகம்,
திருவள்ளுவர் நூல் நிலையம்
13, பெதஸ்தா வணிக வளாகம்
மகளிர் கிறித்தவ கல்லூரி சாலை
நாகர்கோவில் - 629 001.
தொடர்பு எண் : 9442584238.
கொடை : 50/-


அனலுரை



இறை ஊழியர் தேவசகாயம் என்னும் மாமனிதர் குமரி
மாவட்ட மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய
வாழ்வும் பணியும் உலக மக்கள் அனைவருடைய கவனத்தையும்
ஈர்க்காமலில்லை.
1912-ஆம் ஆண்டு பிறந்து 40 ஆண்டுகள் வாழ்வுக் காலத்தில்
பல நல்ல தடயங்களை இம்மண்ணில் விட்டுச் சென்றவர். மக்களால்
சித்தர், ஞானி, மகான், தெய்வ அருள் பெற்றவர் என்று புகழப்பட்டவர்.
ஆனால் அரசன் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை
அடிமைத்தனத்தில் வைத்திருக்க முயற்சித்த அந்தணர்களால்
வெறுக்கப்பட்டவர்.
குறிப்பாக கிறித்தவ விசுவாசத்தைக் காப்பதற்காக
இயேசுவைப் போன்று பாடுகள் பல ஏற்றுக் கொண்டவர். நல்ல
பண்புகளை, நல்ல மதிப்பீடுகளை நம்பிக்கையோடு ஏற்றுக்
கொண்டதால் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு துப்பாக்கி குண்டுகளுக்கு
இரையாக்கப் பட்டவர்.
இறை ஊழியர் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு சொல்லும்
நூல்கள் பல இருந்தாலும் கடித வடிவில் வெளிவரும் முதல் நூலாக
இந்த நூல் உள்ளது. இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டு
இந்த நூலை உருவாக்கிய ஆசிரியர்கள் வெனிஷ், அருளன், பெரி
ஆகியோரை நன்றியோடு வாழ்த்துகிறோம்.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி அணிசெய்த ஆயர்
பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களுக்கு எமது நன்றிகள். இப்புத்தகத்தை
அச்சுக் கோர்வை செய்து தந்த முளகுமூடு கல்லூரி அச்சகத்தார்க்கு
எமது நன்றி. புத்தகத்தின் முகப்போவியத்தை வடிவமைத்த ஓவியர்.
-யோ ராய் அவர்களுக்கு நன்றி. புத்தகத்தை அச்சிட்ட பிரிண்ட்
பாயின்ட் அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள்.
தமிழ் மக்கள் இப்புத்தகத்தை வாசித்துப் பயன் பெற
வாழ்த்துகிறோம்.
அனல் வெளியீட்டக நண்பர்கள்
14.01.2011 திருவள்ளுவர் நூல் நிலையம்
இறை ஊழியர் தேவசகாயம் நினைவு நாள். நாகர்கோவில்.


வாழ்த்துரை



தனது கிறித்தவ விசுவாசத்திற்காக
கொல்லப்பட்டு குமரியின் வீரிய வித்து என்று
மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இறை
ஊழியர் தேவசகாயம் பிள்ளையின் வாழ்வும்
பணியும் கடித வடிவில் வெளிவருவது மிக்க
மகிழ்ச்சி.
அகில உலகத் திருஅவை இறை ஊழியர்
தேவசகாயம் பிள்ளையைவேதசாட்சியாக அறிக்கையிடும் நாள்
விரைவில் உள்ளதான இக்காலச் சூழல் இந்த நூலும் அதற்கு
துணை செய்யும் கருவியாகிறது.
இறை ஊழியர் தேவசகாயம் பிள்ளை பிறந்த முந்நூறாவது
ஆண்டு நெருங்கி வரும் வேளையில் வெளிவரும் இந்தப் புத்தகம்
தமிழ் கூறு நல்லுலகிற்கு ஒரு நற்கொடை.
நல்லவர்களின் வாழ்க்கை மதம், இனம், சாதி பாகுபாடுகளைக்
கடந்து எல்லா மக்களுக்கும் நல்வழிகாட்டும் ஒளி விளக்காகிறது.
நமது இறை ஊழியரின் வாழ்க்கை வரலாறு நம்மவர்கள்
நல்லவர்கள் பலருக்கும் பயன் தரும் அருமருந்தாகும்.
இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களுக்கும், வெளியிடும்
அனல் வெளியீட்டகத்தாருக்கும் எனது பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது நல்ல முயற்சிகள்
அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
கிறிஸ்துவில் அன்புள்ள,

ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்
கோட்டாறு மறைஆயர்


ஆசிரியர்கள் உரை

காற்றாடிமலை


மறைசாட்சியின் மலர் பாதங்கள் பதிந்த இடம்
இறையாட்சியின் விளைநிலமாய் உதித்த இடம்
மெழுகுவர்த்திகளும் மௌனம் தேடும் இடம்
ஊதுபத்திகளும் ஊரறியச் செய்யும் இடம்
பாறைகளும் கவிபாடும் இடம்
வாதைகளும் அகன்றோடும் இடம்
சிறைகளும் சித்திரத்தைக் கண்ட இடம்
குறைகளும் சிகரத்தை அடைந்த இடம்
தோட்டாக்கள் தோல்வியை சந்தித்த இடம்
தோழராய் எதிரிகளும் சந்தித்த இடம்
ஒட்டுமொத்தத்தில்
இறை ஊழியரின் மங்காத மறுபக்கத்திற்கு மை தந்த இடம்
இத்தகைய காற்றாடிமலையில் வேட்டையாடப்பட்ட இறை
ஊழியர் தேவசகாயம் அவர்களின் வாழ்வையும், பணியையும் கடிதங்கள்
வடிவில் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறோம்.

கடிதம்  
கருத்துக்களையும், எண்ணங்களையும் எழுத்து வடிவில்
எடுத்துரைக்கும் ஓர் ஊடகம்.
நாகரீகம் என்ற பெயரில் தகவல் பரிமாற்ற தொடர்பியல் மாறிக்
கொண்டே இருந்தாலும் இந்தக் கடிதத் தொடர்பியலுக்கு மட்டும் மக்கள்
மத்தியில் ஒரு மாறாத இடம் உண்டு. ஏன் கிறித்தவ வாழ்விலும்,
திருவிவி-யத்திலும் இந்தக் கடிதங்கள் முக்கிய இடங்களைப்
பெறுகின்றன.
மக்களின் நம்பிக்கையையும், இறை விசுவாசத்தையும்
ஆழப்படுத்தவும், போ லி வழிபாடுகளையும் சடங்குகளையும் விட்டு
விடவும் தூய பவுல் பல்வேறு தரப்பு மக்களுக்கு தன் கடிதத்தின் மூலம்
இறைவனை நினைவூட்டுகிறார்.

இறை ஊழியர் தேவசகாயமோ தந்தை புத்தாரியிடம் தன்
நண்பர் டிலனாயின் கடிதம் மூலம் அறிமுகமாகி திருமுழுக்குப் பெற்றார்.
தான் சிறையில் இருக்கும்போது குருக்களை சந்திக்க வாய்ப்புக்
கிடைக்காத போது அவர்களுக்கு கடிதம் கொடுத்து அவர்களிடம்
இருந்து நம்பிக்கையும், அன்பும், ஆசீர்வாதமும் நிறைந்த பதிலைக்
கேட்டு அதன்படி அவற்றைக் கடைபிடித்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கடிதத்தை மையமாகக் கொண்டு
இந்தப் புத்தகம் காற்றாடிமலைக் கடிதங்கள் என பெயர் பெற்றது.
இங்கு தேன்மொழி என்ற சிறுமி தன் மாமாவிடம் இறை ஊழியர்
தேவசகாயம் பற்றிய தனது சந்தேகங்களை கடிதம் வழியாகக் கேட்டுத்
தெரிந்து கொள்கிறார். மாமாவும் தகுந்த விளக்கங்களுடன் பதிலை
குறிப்பிடுகிறார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களின்
தொகுப்பே இந்தக்காற்றாடிமலைக் கடிதங்கள்



உள்ளே. . .
கடிதம் 1
வரலாற்றுப் பதிவுகள்
கடிதம் 2
நட்பும், உறவும்
கடிதம் 3
நற்செய்தி அறிவிப்புப் போதனைகள்
கடிதம் 4
இயற்கையும் இறை ஊழியரும்
கடிதம் 5
உன்னதராய் உயர்த்திய நற்பண்புகள்
கடிதம் 6
நம்பிக்கை வளர்த்த செபங்கள்
கடிதம் 7
சுமத்தப்பட்ட குற்றங்கள்
கடிதம் 8
பாடுகளின் காலக் கொடுமைகள்
கடிதம் 9
எதிர்கொண்ட போராட்டங்கள்
கடிதம் 10
தண்டனை தந்த அரசக் கட்டளைகள்
கடிதம் 11
புனிதம் காத்த புதுமைகள்
கடிதம் 12
புனிதர்பட்ட நடவடிக்கைகள்
தெம்புடன் நடை பயில்வோம்...




கடிதம் 1 வரலாற்றுப்பதிவுகள்



15-12-2009
பெங்களூர்


அன்புள்ள தேன்மொழிக்கு,

உன் பாசமிகு மாமா எழுதுவது, நான் நலமாக உள்ளேன்.
உனது பள்ளி நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற
நம்பிக்கையில் உன்னையும் உனது பெற்றோரையும், தம்பியையும்
நலம் விசாரித்து இந்தக் கடிதத்தைக் துவங்குகிறேன். நீ எழுதியக்
கடிதம் கிடைக்கப்பெற்றது. மிக்க மகிழ்ச்சி.
இறைவனுக்கு ஊழியராய் சாதிகளைத் தாண்டி,
தாழ்ந்தவர்களுக்கு உரியது என்று கருதப்பட்ட மதமாக இருந்த
கிறித்தவ மதத்தைப் பின்பற்றி, கொண்ட கொள்கையில்
உறுதியாய் இருந்த இறை ஊழியர் தேவசகாயத்தின்
வரலாற்றைப் பற்றி நீ கேட்ட கேள்விகளுக்கு நான் எழுதும்
இந்த பதில் கடிதம் பயனுள்ளவையாக இருக்கும் என்று
நம்புகிறேன்.
மறைசாட்சியாய் மகுடம் பெற்ற தேவசகாயத்தின்
சுருக்கமான வரலாற்றை நான் இங்கே எழுதுகிறேன். உன்
சந்தேகங்களை பதில் கடிதத்தில் குறிப்பிட்டு எழுது.

இறைஊழியர் தேவசகாயம் பிள்ளை

தன்னம்பிக்கையின் தலைவர். இறைநம்பிக்கையில் இனியவர்.
பத்மனாபபுர வரலாற்றை பங்குபோட்டவர்.
மண்வாசனைக்கும், கிராமத்துக் காற்றுக்கும் சொந்தக்காரர்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு நிலையையும் தவறவிடாதவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மனாபபுரத்தி-ருந்து
ஏழு கிலோமீட்டர் மேற்காக உள்ள நட்டாலம் என்ற
தனது சொந்த கிராமத்தை நாடறியச் செய்தவர்.
இயற்பெயர் நீலகண்டன்.
23-04-1712-இல் பிறந்த வரலாற்று நாயகன்.
நாயர் குலத்தில் வாசுதேவன் நம்பூதிரிக்கும், தேவகியம்மைக்கும்
மகனாக பிறந்தவர், இவரது தங்கையின் பெயர் இலச்சுமிக்குட்டி.
குறிஞ்சி நிலப்பரப்பில், கிராமத்து வாழ்க்கையில்
மக்களால் அதிகமாக நேசிக்கப்பட்ட உத்தமர்.
மொழிகளையும், கலைகளையும் கற்றுத் தெளிந்தவர்.
வெள்ளைக் காகிதத்தில் முல்லைப்பூவாய்
மக்கள் மனதில் வரையப்பட்டவர்.
பார்கவியம்மா என்னும் இயற்பெயரைக் கொண்ட
ஞானப்பூ (தெரசா) என்ற தலக்குளம் குடும்பத்தைச் சார்ந்த
பெண்மணியை துணைவியாக ஏற்றுக்கொண்டவர்.
செல்வச் செழிப்பில் செல்லமாய் வளர்க்கப்பட்ட பின்னரும்
தன்னடக்கமும் நன்னடத்தையும் கொண்டவர்.
கால்போன போக்கில் வாழத் தெரியாதவர்.
மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில்
அரண்மனையில் பணியாற்றியவர்.
தோமையார் கால கத்தோ-க்கத் திருமறையின்
திருவிதாங்கோடு சான்றதிரு கரைகண்ட முத்தப்பர் என்பவரை
ஆசிரியராகக் கொண்டு திறன் வளர்த்தவர்.
பனை ஓலையில் நாராயம் கொண்டு எழுதத் தெரிந்த
இவருக்கு தமிழ், மலையாளம், வடமொழி புலமை இருந்தது.
வேதாந்தம், இலக்கணம், வர்ம சாஸ்திரம், போர்ப்பயிற்சி
போன்றவைகளும் இவருடன் சங்கமித்தன.
உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து
"நீதியின் வாயில்' என்னும் சிறப்பு பெற்றவர்.
ஆட்சிமுறையிலும், வஞ்சகத்திலும், பணத்தால் எதிரிகளை
விலைக்கு வாங்கும் வித்தையிலும் சிறந்து
"மந்திரத்தால் மாங்காய் விழும்' என்ற தந்திரத்தையும்
அறிந்திருந்த வள்ளியூரை அடுத்த ஏர்வாடியில்
ஏழையாய் பிறந்த "இராமையன் தளவாயுடன்' பணிபுரிந்தவர்.
1741 ஜீலை 31-ஆம் நாளில் குளச்சல் போரில்
கைதியாக பிடிக்கப்பட்டு பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மாவின்
படைத்தளபதியாக மதியுடன் செயல்பட்டு பல மன்னர்களை
தோற்கடித்து, அரசரின் அரியணைக்கு அச்சாணியாக அமைந்தவர்.
முன்பு டச்சு போர்ப்படையின் தளபதியான "ஜெனரல் எஸ்தாக்கியூஸ்
பெனடிக்ட் டிலனாய்' என்பவரால் மனமாற்றம் பெற்றவர்.
டிலனாயின் கிறித்தவ பக்தியாலும், போதனையாலும்
கவரப்பட்டு கிறித்தவ மதத்தையும், அவரது நட்பையும்
கற்பூரம் பற்றிக் கொள்வதுபோல ஏற்றுக் கொண்டவர்.
துன்ப காலத்தில் இறை ஊழியர் தேவசகாயத்திற்காக
கண்ணீர் விட்டவரில் ஒருவர் இந்த டிலனாய்.
யோபுவின் விசுவாச வாழ்க்கையைச் சொல்-க் கொடுத்தவரும் இவரே.
மரிய மல்லன் மாயக்குட்டி, தொம்மன் திருமுத்து,
தொம்மை சின்னத்தம்பி அண்ணாவியை
நண்பர்களாகக் கொண்டிருந்தவர்.
மாற்றுச் சிந்தனையில் வளர்ந்தவர்; பழகுவதில் எளிமையானவர்.
புதிய சமூகத்தின் நவீன சிற்பி.
மனதை மாற்றும் இறைமந்திரம் தெரிந்தவர்.
தயங்கிய பணி. புத்தாரி அவர்களிடமிருந்து

திருமுழுக்கை தைரியத்துடன் கேட்டு வாங்கியவர்.
வடக்கன்குளத்தில் வாடா மலராய்
திருக்குடும்ப ஆலயத்தில் 17-05-1945-இல் திருமுழுக்கு பெற்றவர்.
மறைக்கல்வி என்ற இறைதாகத்தை தணித்த
வடக்கன்குளம் பங்கு உபதேசியார் ஞானப்பிரகாசம் என்பவரை
ஞானத் தகப்பனாகப் பெற்றவர்.
வடக்கன்குளம் ஆலயக் கட்டுமான பணிக்காகப்
பங்குப் பணியாளர் புத்தாரியிடமிருந்து பெற்றுக் கொண்ட
மரத் தேவைக்கானக் கடிதத்தை மன மகிழ்ச்சியுடன்
இராமையன் தளவாயிடம் எடுத்துச் சென்றவர்.
மரத்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாததால் வருத்தப்பட்டவர்;
அதற்காக தளவாயின் கோபத்திற்கு ஆளானவர்.
அரசர் குடும்பத்துடன் அளவுக்கு அதிகமான
அன்புகொண்டிருந்த நல்ல மனிதர்.
அரசு பணிகளை நுணுக்கமான முறையில் செய்து முடிப்பவர்.
சித்தன், ஞானி, மகான், தெய்வ அருள் பெற்றவர்
எனப் புகழப்பட்டாலும் புகழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளாதவர்.
வண்ணத்துப்பூச்சியிடம் காணப்படும் உற்சாகத்தைப் போல்
அவமான பவனியிலும் உற்சாகமாகக் காணப்பட்டவர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைத்தனத்துக்கு
எதிராக முழக்கமிட்டவர்.
பொதுவாகப் பார்த்தால் இவர் பொருட்செல்வர்.
இறைவனுடன் பார்த்தால் இவர் இறை செல்வர்.
திறக்கப்படாமல் இருந்த பல மனங்களை
போதனையால் திறந்தவர்.
திறக்கப்படத் தேவையில்லை என்றிருந்த
இதயக் கதவுகளை உடைத்தெறிந்தவர்.
கவிபாடும் கவிக்குயில் "தொம்மன் திருமுத்து' என்ற புலவருடன்
சிறையில் மறையை பரப்பியவர்.
இறை மனித உறவுக்கு இணைப்புப் பாலம் இவர்.

ஆழ்ந்த தியானத்தால் மறை உண்மையை
ஏற்றுக் கொண்டவர்.
உண்மையை வளைக்கத் தெரியாதவர்,
முதியவர்களையும், முன்னோர்களையும், மன்னர்களையும்,
மகாமுனிவர்களையும் எதிர்த்து
நிறைவாழ்விற்கான வழியைத் தேர்ந்து கொண்டவர்.
வெளிவேடம் போடத் தெரியாதவர்.
"நாருடன் இணைந்த பூவாய்' நறுமணம் வீசிய
தன் மனைவியையும் வடக்கன்குளத்தில் திருமுழுக்கு பெற
வழித்தடம் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
மனைவியையும், மற்றவர்களையும் மனம்மாற்றிய
பெருமைக்குச் சொந்தக்காரர்.
அர்ப்பண வாழ்க்கை வாழ்ந்து,
உறவுகளை உதறித் தள்ளிவிட்டு
கிறித்துவுக்காக உயிர்நீத்தவர்.
கலங்கிய நீரூற்றுப் போன்ற மக்களின்
மனங்களை தெளிய வைத்தவர்.
கலங்கிய நீரில் காசைத் தேடும் மூடர்களைப் போல்
விவாதம் செய்தவர்களை தன்னுடைய
வாதத்தால் வென்று காட்டியவர்.
சூழ்ச்சிகளை தனது தாழ்ச்சியால் வீழ்த்தியவர்.
ஆட்சியாளர்களின் சீற்றங்களை
அமைதியான முறையில் ஆட்கொண்டவர்.
கோபப்படத் தெரியாதவர். விவேகமான விந்தையாளர்.
போதனைக்காக வேதனைகளை ஏற்றுக் கொண்டவர்.
அன்பின் ஆழத்தை அறிமுகப்படுத்தியவர்.
கிறித்துவின் அன்பினால் சுமைகளைக் கூட
சுகமாக்கி கொண்டவர்.
அருட்பணி. பீட்டர் பரேரோஸ் சே.. அவர்களிடமிருந்து
முதல் திருவிருந்தை பெற்றவர்.

பிலாத்துவின் அரண்மனையில் விசாரணைக் கைதி இயேசு.
மார்த்தாண்ட வர்மா அரண்மனையில் விசாரணைக் கைதி தேவசகாயம்.
தாலுகா அதிகாரிகளின் முன்பு தரம் தாழ்ந்த
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்.
மனம்மாறியதற்காக அரச தண்டனை பெற்றவர்.
இறைவனை ஏற்க அரக்கர்களை எதிர்த்தவர்.
விவி- விளக்கங்களை விசாரணை இடங்களில் எடுத்து இயம்பியவர்.
ஏழைகளோடும், எளியவர்களோடும் உணவருந்தியவர்.
பணக்காரர்களோடும், வசதி படைத்தவர்களோடும்
பாசாங்கு செய்யத் தெரியாதவர்.
கல்வாரிப் பாடுகளை காலம் தவறாமல் தியானித்தவர்.
திருப்ப-யில் கலந்து கொள்வதில் கடமை தவறாதவர்.
திருவருட்சாதனங்களை சரியாகப் பெற்றுக்கொண்டவர்.
இறை அப்பத்தில், செபத்தில் மகிழ்வைக் கண்டவர்.
மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்.
சதித் திட்டங்களில் சிக்கவைத்த போதும்
ஆத்திரப்படுத்தும் ஆவேசப்படுத்தும் வார்த்தைகளால்
வசை பாடியபோதும் இயேசுவை மறுத-க்க மறுத்தவர்.
எதிரிகளையும் எளிமையாகக் கவரத் தெரிந்தவர்.
அடக்கு முறையையும் அன்பாக ஏற்றுக் கொண்டவர்.
"யோசேப்பின் மகன் தானே,
இவனுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு ஞானம்'' என்று
இயேசுவைப் பார்த்து ஏளனப்படுத்தியவர்களும்
இவருடன் இல்லாமல் இல்லை.
இழைத்த உடம்பில் இயேசுவுக்காக
இரும்புத் தடிகளையும் தாங்கியவர்.
சிராய்ப்புகளிடையே சிகரத்தைத் தொட்டவர்.
மாலைக் கருக்க-ல் மல்-கையாய் மலர்ந்தவர்.
மலை முகடுகளில் இறைவனோடு நடந்தவர்.
விசுவாசத்தை விளம்பரம் இல்லாமல் விளம்பியவர்.

அவிசுவாசத்தை சமரசம் செய்யாமல் சாடியவர்.
இவர் மக்கள் மீது கொண்ட பாசம் உண்மைதான்.
இவரை இழந்த மக்களுக்கு துன்பமும் அதிகம்தான்.
இறுதி நெருப்பு நிமிடங்களில் கூட இறைவனிடம் செபித்தவர்.
இறைவரம் பெற்றவர்.
இறையாட்சியின் விசைப்படகை
பல திசைகளை நோக்கி இயக்கியவர்.
மழை வெள்ளத்தில் அடித்து இழுத்துச் செல்லப்படும் மணலாய்
பல இடங்களுக்கும் கொடுமையாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர்.
இவர் பயணப்பட்ட பாதை கடினமானது.
ஏற்றுக்கொண்ட மதம் புனிதமானது.
தாலுகா தாலுகாவாக, ஊர் ஊராக, சிறைகள் சிறைகளாக
உணவின்றி, உறக்கமின்றி, உறைவிடமின்றி,
தனிமைப்படுத்தப்பட்டு தள்ளாட விடப்பட்டவர்.
தாகத்திற்காக பு-யூர்குறிச்சி பாறையை இடித்து
தண்ணீரோடு இறைதாகத்தையும் தீர்த்துக் கொண்டவர்.
நஞ்சுகலந்த உணவினால் தீண்டப்படாதவர்.
உப்புக் கலந்த நீர் உத்தமரை உற்சாகப்படுத்தியது.
மரம், மழை, வெயில், குளிர் என இயற்கையுடன்
இணைந்த வாழ்வை வாழ்ந்தவர்.
சிங்கத்தையும், பேய்களையும் பயமுறுத்தியவர்;
பூவரசு மரம், ஆலமரம், வேப்பமரம் என மரங்களில்
தன் கிறித்தவ வாழ்வைக் கழித்தவர்.
மரத்தடியில் மறை உண்மைகளை போதித்தவர்.
வான்படைப் போர் தளபதியின் உடனிருப்பை வேண்டியவர்.
வான்படைகளின் தேவனோடு உரையாடியவர்.
திருக்குடும்ப காட்சி கண்டவர்.
சிறையில் இருந்த இடங்களிலெல்லாம்
மக்களின் மனச்சிறையைத் திறந்தவர்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும்
அதிகாரமுடைய ஆராச்சார் குற்றவுணர்வுடன்
குனிந்த தலையுடன் நிற்க காரணமானவர்.
ஆராச்சாருக்குக் குழந்தைப் பேறு கிடைக்க அருளியவர்.
துயர் போக்கும் தூணாய் இருந்தவர்.
தூரத்தில் தெரியும் பொன்வான நிலா அவர்.
தூக்குப் போட்டுக் கொல்லும் இடத்திற்கும்,
கழுவேற்றிக் கொல்லும் இடத்திற்கும்,
கழுத்தை வெட்டிக் கொல்லும் இடத்திற்கும்
கொண்டு செல்ல தீர்ப்புப் பெற்று தப்பித்தவர்.
நோய்களுக்கும், மனவேதனைகளுக்கும் மருந்து கொடுத்தவர்.
இயலாமையிலும் இறைவார்த்தையை தியானித்தவர்.
மக்கள் மனங்களின் காயங்களை மன்னவன் இயேசு என்ற
மயி-றகால் வருடி மருந்திட்டவர்.
பெருவிளையில் தப்பித்துக் கொள்ள வழிகிடைத்த பிறகும்
இறை வழித்தடத்தை மாற்றாதவர்.
காவலர்களின் கடுஞ்சொல்லையும்,
கொடிய வெயி-ன் தாக்கத்தையும், மழையின் வேகத்தையும்
தாங்கிக் கொண்டவர்.
தள்ளாடிய பிறகும் தடம் மாறாதவர்.
ஆட்டுக்கு உயிர் கொடுத்தவர்.
ஊமை பெண்ணுக்கு வார்த்தை வழங்கியவர்.
குழந்தைச் செல்வம் கொடுத்தவர்.
மகோதர நோயினைக் குணப்படுத்தியவர்.
எருமை ஊர்வலம், எருக்கம் பூமாலை, கசையடி,
சூரை முள்ளடி, மிளகாய்ப் பொடி, சுண்ணாம்புக் காளவாய்,
எறும்புக்கூடு, மரத்தடி இருப்பிடம்,
சிங்கக்காடுகளில் நடைபயணம் என்கிற பெயரில் நடந்த
கொடிய நெடிய பயணத்தை தாங்கிக் கொண்டவர்.

காவலர்களுக்கு கனிவு காட்டியவர்.
தனது வாழ்நாளில் வந்து போனவர்களுக்காக செபித்தவர்.
இறுதி நேரத்திலும் கூட இறைவனோடு இருக்க ஆசைப்பட்டவர்.
மாதாவை வேண்டி மனவுறுதி பெற்றுக் கொண்டவர்.
21 ஆண்டுகளாய் நாட்டின் உயர்விற்காகவும்,
மன்னரின் வெற்றிக்காகவும் மக்களின் நலனுக்காகவும்
தன்னை அர்ப்பணம் செய்தவர்.
ஆனால் கிறித்தவம் தழுவிய குற்றத்திற்காக
சிறையில் அடைக்கப்பட்டவர்.
தலைநகரைச் சுற்றி கொலையாளியைப் போல்
அவமானப்படுத்தப்பட்டவர்.
ஆரல்வாய்மொழியில் நோயினால் அவதிப்பட்டவர்.
மருத்துவத்தை நன்றியோடு மறுத்தவர்.
பாசம் என்னும் ஏட்டில் தனது கையெழுத்தை பக்குவமாய் பதித்தவர்.
வாழ்க்கைப் பயணத்தை முன்கூட்டியே அறிந்தவர்.
அடக்கு முறைகளுக்கு உள்ளானவர்
ஆராதனைக்குரியவரானார்.
இறுதி செபத்தில் தனது கால் முட்டையும்
கை முட்டையும் பதித்தவர்.
40 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்.
மங்கா ஒளிவிளக்காய் திகழ்ந்தவர்.
7 ஆண்டுகால திருமறைப் பணியில் திறம்பட செயலாற்றியவர்.
5 துப்பாக்கிக் குண்டுகளில் தன் கிறித்தவ வாழ்வுக் கொடுமைகளை
நிறைவுக்குக் கொண்டு வந்தவர்.
மரத்தடியில் இருந்து கிராத்தடியால்
மலைமேல் ஏற்றப்பட்டு மழைமேகம் மறைக்கும் சூரியன் போல்
மறைந்த இடத்தில் மரணத்தை தழுவினார்.
1752-ஆம் ஆண்டு சனவரி மாதம் 14--ஆம் நாள்
மன்னவன் மறைசாட்சியாக மறைந்தார்.
இயற்கையின் இதயம் கூட அன்று கனத்தது.

பாறை ஆலயமணியாக லித்தது.
தாயின் மடியாக ஆலமரம் நிழல் தந்தது.
கொச்சி ஆயர் மேதகு கிளமென்ட் ஜோசப், சே..
மறைமாவட்டக் கோவி-ல் ஆயர்களுக்கு உரித்தான
"போந்திப்பிக்கல்'' திருப்ப- நிறைவேற்றி
"தெதேயும்' என்ற நன்றி கீதம் பாடினார்.
மார்த்தாண்ட வர்மா இவரது மரணத்திற்காக மனம் வருந்தினார்.
கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தில்,
பெரிய பீடத்தின் முன் கோட்டாறு பங்குப் பணியாளர்
தாமஸ் டி. பொன்சேகரா, சே.. அவர்களின் தலைமையில்
நடந்த ஆடம்பரத் திருப்ப-யில் அடக்கம் செய்யப்பட்டார்.
கிறித்தவனாய் வாழ்ந்த நாட்களில்
பல இடங்களுக்கு இயேசுவுக்காய் பயணித்தவர்.
இம்மியளவும் இறைவனை பிரியாதவர்.
இவ்வாறு கிறித்துவுக்காய் மரித்து மறைசாட்சியானார்
தேவசகாயம். அவரது புனிதர்பட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பதில் கடிதத்திற்காக காத்திருக்கும்
உன் அன்புள்ள,
மாமா.
குறிப்பு:- இக்கடிதத்துடன் உனக்கும், தம்பிக்கும் கிறித்து பிறப்பு
விழாவுக்கு புத்தாடை எடுத்து அனுப்பி உள்ளேன்.




02-01-2010
நாகர்கோவில்

அன்புள்ள மாமாவுக்கு,
தேன்மொழி எழுதுவது. இங்கு அப்பா,
அம்மா, தம்பி அனைவரும் நலமாக
இருக்கிறோம். நீங்கள் அனுப்பிய கடிதம்
கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனது பள்ளி
நாட்கள் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கின்றன. தம்பிதான்
பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்
கொண்டிருக்கிறான். நீங்கள் அடுத்த கடிதத்தில் அவன் பள்ளிக்குப்
போக அறிவுரைக் கூற அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்.
நீங்கள் கிறித்து பிறப்பு விழாவிற்கு அனுப்பிய புத்தாடை நன்றாக
இருந்தது. நமது கோயி-ல் நடைபெற்ற கிறித்து பிறப்பு மரவிழாக்
குலுக்க-ல் எனக்கும் பரிசுக் கிடைத்தது. கிறித்துபிறப்பு இசை
உலா (பஜனை) நிகழ்விலும் நான், தம்பி, அம்மா, அப்பா என
அனைவரும் கலந்து கொண்டோம். சிறப்பாக இருந்தது.
பாடகற்குழுவுடன் சேர்ந்து நானும் பாடினேன். உங்களுக்கு கிறித்து
பிறப்பு விழா எப்படி இருந்தது? நன்றாகக் கொண்டாடினீர்களா?
இறை ஊழியர் தேவசகாயத்தின் வரலாற்றைப் படித்தேன்.
மகிழ்வும், நம்பிக்கையும் ஊட்டுவதாக இருந்தது. ஒரு
மறைசாட்சியின் வாழ்க்கை வரலாற்றை அறிய செய்ததற்கு
உங்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இவ்வளவு
துன்பங்களை ஏற்று இறைவனுக்காக இறந்ததை நினைக்கும் போது
மனது அவரை நினைத்துப் பெருமைப்படுகிறது. அவரது
நண்பர்களைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் விரிவாக அடுத்தக்
கடிதத்தில் எழுதி அனுப்புங்கள். அவரைப் பற்றி முழுமையாகத்
தெரிந்துக் கொள்ள எனக்கு ஆசையாக இருக்கிறது.
கடிதத்திற்காக காத்திருக்கும்.
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் II. நட்பும் உறவும்

10-01-2010
பெங்களூர்

அன்புள்ள தேன்மொழிக்கு,
உன் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இங்கு நான்
நன்றாக இருக்கிறேன். எனது அலுவலகப் பணிகளும் நன்றாகப்
போய்க் கொண்டிருக்கின்றன. நீ பரிசு வாங்கியது பெருமையாக
உள்ளது. தம்பி ஏன் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று
சொல்கிறான்? அவனிடம் "பள்ளிக்கு ஒழுங்காகச் சென்றால் நான்
ஊருக்கு வரும்போது கணினி வாங்கி வருவதாகச் சொல்.'
நானும் கிறித்துபிறப்பு விழாவை இங்கு நன்றாகக்
கொண்டாடினேன். கிறித்து பிறப்பு விழா நள்ளிரவுத்
திருப்ப லிக்கு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதிக
தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் அடுத்த நாள்
காலையில்தான் சென்றேன். நமது கோயில் கிறித்துபிறப்பு
விழா நன்றாக நடந்தது என்பதை அறிய மகிழ்வாக இருக்கிறது.
இறை புகழ் பாடுவது நல்லது. எனவே நேரம் கிடைக்கும்
போதெல்லாம் நல்லப் பாடல்களை பாடு. நான் அடுத்தக்
கடிதத்துடன் சில பாடல் குறுந்தகடுகளையும் அனுப்பி
வைக்கிறேன். நன்றாகப் பயிற்சி செய்.
இறை ஊழியர் தேவசகாயத்தைப் பற்றி முழுமையாக அறிய
ஆவலாக இருப்பதாக எழுதியிருந்தாய். மகிழ்ச்சியாக இருக்கிறது.
உனக்கு இக்கடிதத்தில் அவரது நண்பர்களைப்பற்றியும் அவரது
மனைவியைப் பற்றியும் எழுதுகிறேன். நீ படித்துவிட்டு தம்பிக்கும்
அதை விளக்கிக் கூறு.
i) டிலனாய்
இறை ஊழியர் தேவசகாயத்திற்கு சிறுவயது முதலே கிறித்தவ
நண்பர்கள் இருந்தார்கள். மத நல்-ணக்கம் எப்பொழுதுமே அவரது
மனதில் இழையோடிக் கொண்டிருந்தது. இவர் நண்பர்களில் மிகவும்
முக்கியமானவர் டிலனாய். டிலனாயை தன் உயிர் நண்பனாக இறை
ஊழியர் தேவசகாயம் ஏற்றுக்கொண்டார். துன்ப நிகழ்வுகளிலும்
சோதனை நேரத்திலும் டிலனாய் இவருக்கு ஆறுதல் சொன்னார். பல
நேரங்களில் இவருக்காக செபித்தார்.
குடும்ப வாழ்வுச் சூழல் இறை ஊழியர் தேவசகாயம்
துயருற்று நின்ற வேளையில் உற்ற நண்பனாய் இவருக்கு ஆறுதல்
அளித்து கிறித்தவ மறையையும் போதித்தார். கடிதத்துடன்
வடக்கன்குளம் பங்குப் பணியாளர் புத்தாரியிடம் அனுப்பி
திருமுழுக்கு பெறவும் ஏற்பாடு செய்தார் டிலனாய். ஓர் உயிர் காக்கும்
தோழமையும் சகோதர பாசமும் நிறைந்த அன்புடன் இறை ஊழியர்
தேவசகாயம் கைது செய்யப்படுவதற்கு முன்பு டிலனாய் அவரைக்
கட்டித் தழுவினார். தேவசகாயம் கைதாகி சென்றபோது தியானப்
புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு தன் குடும்பத்தாரையும்
அழைத்து சென்று உதயகிரி கோவி-ல் அமர்ந்து ""திருமணி
ஆராதனை'' செய்து நண்பனுக்காக செபித்தார்.

இறை ஊழியர் தேவசகாயம் தான் அவமானப் பவனியில்
பட்டத் துன்பங்களை எல்லாம் கடிதம் மூலம் தன் நண்பருக்கு
தெரிவித்துக் கொண்டேயிருந்தார். டிலனாயும் தன் நண்பனுக்கு
அடிக்கடி கடிதம் எழுதினார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த
போதெல்லாம் இறை ஊழியர் தேவசகாயத்தை சந்தித்து ஊக்கம்
தந்தார்.
சிறையில் இறை ஊழியர் தேவசகாயத்தின் நிலைமையை
அறிந்து வந்தார். ஓர் ஐரோப்பியக் காவலனை இவருக்கு துணையாக
இருக்க உதவினார். இதனை அறிந்த மன்னன் மார்த்தாண்ட வர்மா
எச்சரிக்கையும் விடுத்தார். இறை ஊழியர் தேவசகாயம் கொல்லப்பட்ட
போது டிலனாயின் மனைவியும் மக்களும் குடும்ப நண்பரை இழந்த
வேதனையில் துயரம் கொண்டார்கள்.
ii) தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி
இறை ஊழியர் தேவசகாயத்தின் நண்பரான "தொம்மை
சின்னத்தம்பி அண்ணாவி' கி.பி.1716-இல் பிறந்தார். இவர் தேவசகாயத்தின்
பள்ளித் தோழராக இருந்தவர். இவர் மார்த்தாண்ட வர்மாவின்
மெய்க்காவலர்களில் ஒருவர். மண- சந்திப்பின் "அளவட்டிவிளை'க்கு
சொந்தக்காரர். திருவிதாங்கோடு நாட்டின் பண்டாரப் பாளையத்
தரைப்படையின் தலைவராக இருந்தவர். கி.பி.1752-இல் இறை ஊழியர்
தேவசகாயம் இறந்தபோது இவரும் இவருடைய குடும்பத்தாரும்
சித்தரவதைக்கு ஆளானார்கள். கொச்சியிலுள்ள கானான் குருசு
கோவி-ல் பஜனை பாட்டு எழுதி களியல், சவட்டு நாடகம், வர்மாணி
வைத்தியம் போன்றவைகள் கற்றுக் கொடுத்து பல சீடர்களை இவர்
உருவாக்கினார். சீடர்களால் ""கான கோகிலம்'' என்று பாராட்டப்பட்டார்.
தூய தமிழில் பல ஏடுகளை எழுதியுள்ள இவர் கி.பி.1770-இல் காலமானார்.
iii) தொம்மன் திருமுத்து
இறை ஊழியர் தேவசகாயத்தின் நண்பர் "தொம்மன் திருமுத்து'
கி.பி.1712-இல் பிறந்தார். இவரும் இறை ஊழியர் தேவசகாயமும்
பள்ளியிலும், சிறையிலும் ஒன்றாக இருந்தவர்கள். இவர் ஒரு கவிஞர்.
இவரிடம் உள்ளூர் தேவர்களின் பாடல்களை எழுதும்படி
வற்புறுத்தினார்கள். அவர் எழுத மறுத்ததின் காரணமாக சிறையில்
அடைத்தார்கள். பரைக்கோடு ஆசான் சான்றதிரு கரைகண்ட
முத்தப்பரின் மகன் இவர். மன்னர் மார்த்தாண்ட வர்மாவின்
அரண்மனையில் பணியாற்றினார். தோமையார் சரித்திரம், மூன்று
அரசர்கள், எஸ்தாக்கியர், ஞான சௌந்தரி, ராயப்பர், சின்னப்பர்
நாடகங்கள் எழுதியவர். மிக்கேல் அதிதூதர் தியானத்திலும், வர்மாணி
வைத்திய முறையிலும், பேய் ஓட்டுவதிலும் பெரும் பெயர் பெற்றவர்.
இவர் கி.பி.1795-இல் காலமானார்.
iv) மரிய மல்லன் மாயக்குட்டி
இறை ஊழியர் தேவசகாயத்தின் நண்பரான "மரிய மல்லன்
மாயக்குட்டி' கி.பி.1717-இல் பிறந்தார். இவர் திருமுத்துப் பண்டாரப்
பாளையக் குதிரைப் படையின் தலைவர். "இறை ஊழியர்
தேவசகாயத்தைக் கொல்லக்கூடாது' என்று அரசரின் படைகள் மூலம்
குரல் கொடுத்தவர். இறை ஊழியர் தேவசகாயத்தின் தார்மீக
செயல்களால் பொறாமைக் கொண்ட கூட்டத்தினரால் வாழ்விழந்த
ஆசான்களில் இவரும் ஒருவர்.
v) ஞானப்பூ (பார்கவி)
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனைவியின் இயற்பெயர்
பார்கவி. இந்து மதத்தி-ருந்து கிறித்தவ மதத்தை தன் கணவரின்
அறிவுரையால் தழுவினார். தலக்குளம் கிராமத்தி-ருந்து
இடம்பெயர்ந்து திருவிதாங்கோட்டின் மேற்குப் பக்கமுள்ள அமராவதி
குளத்தின் ஓரத்தில் அமைந்திருந்த மேக்கோடு என்ற ஊரில்
வாழ்ந்தவர்.
அவருடைய திருமுழுக்குப் பெயர் ""ஞானப்பூ'' (தெரசா). தன்
கணவருடன் இணைந்து இவரும் உதவிகள் செய்வதிலும் கிறித்தவ
மதத்தைப் பரப்புவதிலும் முனைந்து செயல்பட்டார். தன் கணவருக்கு
கொடுக்கப்பட்ட சித்திரவதை தனக்கும் கிடைக்கட்டும் என்று
தைரியத்தோடு கிறித்தவ மறையைப் போதித்தார். மனமாற்றத்தில் தன்
அன்னைக்கு இணங்காமல் தன் கணவரோடு கைகோர்த்தார்.
இராமன்புதூர், திருவனந்தபுரம் மண்டபத்தின் வாசல்,
ஆரல்வாய்மொழி ஆகிய இடங்களுக்குக் கண்ணீருடன் சென்று
தனது கணவரை பாடுகளின் போது சந்தித்து ஆறுதல் கூறினார்.
"எங்கள் உள்ளம் கலங்காதிருக்க உமது அருளைத் தாரும், என்
கணவரை பசாசின் வஞ்சகங்களினின்று காப்பாற்றும் தயாபரா!'' என்று
இறைவனிடம் தன் கணவருக்காக பசாசின் சோதனைகளை
வெல்வதற்காக செபித்தார்.
துன்பங்களையும், குடும்பத்தாரின் தொல்லைகளையும் தாங்க
முடியாமல் தன் கணவர் இறந்தபின் சிறிதுகாலம் கிறித்தவ
விசுவாசத்தை விட்டுவிட்டார். பின்னர் மனம் வருந்தி திரும்பினார்.
ஆவூரில் தனக்கு திருமுழுக்கு அளித்த பணி. புத்தாரியின் கல்லறை
மேல் நான்கு தூண் மண்டபம் ஒன்றை அமைத்தார். தன் கணவரின்
கட்டளைப்படி தம் ஞானத்தாயும், வேதியர் ஞானப்பிறகாசம் என்பாரின்
மனைவியுமான தெரசாவுடன் வடக்கன்குளத்தில் 14 ஆண்டுகள்
வாழ்ந்து அங்கு இறந்தார்.
இவ்வாறு இறை ஊழியர் தேவசகாயத்தின் நண்பர்களும்,
மனைவியும் அவரது மறைசாட்சி மகுடத்திற்கு உறுதுணையாக
இருந்தார்கள். நீயும் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்.
எல்லாரிடமும் நன்றாகப் பழகு. அம்மா அப்பாவுக்கு கீழ்படியும்
பிள்ளையாய் நடந்துகொள். யாரிடமும் சண்டை போடாமல்
சாந்தமாகப் பதில் கூறு.
உன் பதில்கடிதத்திற்காக காத்திருக்கும்
உன் அன்புள்ள,
மாமா.

 
22-01-2010
நாகர்கோவில்

அன்புள்ள மாமாவுக்கு,


உங்கள் அன்பு தேன்மொழி எழுதுவது. நீங்கள் அனுப்பியக்
கடிதம் கிடைத்தது. இறை ஊழியர் தேவசகாயத்தின் நண்பர்களைப்
பற்றியும், அவரது மனைவியைப்பற்றியும் அறிந்து கொண்டேன்.
அவரது நண்பர்களும், மனைவியும் எவ்வாறு அவருக்கு
உதவியும் உறுதுணையுமாக இருந்தார்கள் என்பதைப்பற்றி ஆழமாகத்
தெரிந்துகொண்டேன். தம்பிக்கும் எடுத்துச் சொல்-யிருக்கிறேன்.
தம்பியிடம் நீங்கள் வாங்கித் தருவதாகச் சொன்ன கணினியைப்பற்றி
சொன்னேன். அவனும் தவறாமல் பள்ளிக்குச் செல்கிறான்.
இறை ஊழியர் தேவசகாயம் செய்த போதனையால் அவரது
மனைவி மனமாற்றம் பெற்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்
அவரது மனைவிக்கு மட்டும்தான் போதனை செய்தாரா? அல்லது
யாருக்கெல்லாம் போதித்தார்? என்னென்ன போதனைகளை அவர்
போதித்தார்? போதனைகளை தெளிவாகச் சொல்லுங்கள் மாமா.
உங்கள் பணியினிடையே இந்தக் கடிதத்திற்கும் நேரம் ஒதுக்கி
எனக்கு சொல்- தருவதற்கு நன்றி. உங்களது உடல் நலனைக்
கவனித்துக் கொள்ளுங்கள். நேரம் தவறாமல் சாப்பிடுங்கள்.
நீங்கள் அனுப்பித் தருவதாகச் சொன்ன இசைக் குறுந்தகட்டை
மறக்காமல் அனுப்பி வையுங்கள்.
பதில் கடிதத்திற்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் 3 நற்செய்தி அறிவிப்புப் போதனைகள்

10-02-2010
பெங்களூர்

அன்புள்ள தேன்மொழிக்கு,
அன்பும், பண்பும் கொண்ட மாமா எழுதும் பாச மடல். உன்
பதில் கடிதம் கிடைத்தது. இறை ஊழியர் தேவசகாயத்தின்
போதனைகளைப்பற்றி விரிவாக இந்தக் கடிதத்தில்
எழுதுகிறேன். நான் அனுப்பி தருவதாகச் சொன்ன இசைக்குறுந்தகட்டையும் இந்தக் கடிதத்துடன் அனுப்புகிறேன்.
தம்பி பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வது அறிந்ததும்
மகிழ்ச்சியடைந்தேன். தவறாமல் விவி-யம் படி. இறை
ஊழியர் தேவசகாயத்தின் வரலாற்றைப் படித்து அவரது
போதனைகளையும் வாழ்வு முறைகளையும் பிறருக்குச் சொல்ல
வேண்டும் என்று நெடுநாள் என்னிடமிருந்த ஆவல் இன்று
நிறைவேறுகிறது. அந்த ஆவலை உனக்கு கடிதமாக எழுதி
அனுப்புகிறேன். இரவில்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
அதனால் என் அலுவலகப் பணிகள் ஒன்றும் பாதிக்காது. நேரம்
தவறாமல் சாப்பிட்டு வருகிறேன். நீயும் உன் உடல் நலனைக்
கவனித்துக் கொள். நன்றாகப் படி. நிறைய மதிப்பெண்கள்
பெற வேண்டும். சரி இனி போதனைகளைப்பற்றி கூறுகிறேன்.

இறை ஊழியர் தேவசகாயத்தின் போதனைகள், சாதனைகள்
படைக்கும் நோக்கமுடையவை அல்ல. மாறாக மாற்றத்தை
ஏற்படுத்தும் நோக்கில் அலங்கரிக்கப்பட்ட அலங்காரத் தோரணங்கள்.
புதிய சமூகத்திற்கான மாற்று விதைகள்.
அவர் போதித்த போதனைகள் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டன.
எட்டிநின்று பார்த்தவர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டன.
மனம் போன போக்கில் சென்றவர்கள் வாழ்வைத் தட்டிப்பார்த்தன.
விடிவில்லை என்று ஏங்கியவர்களுக்கு ஏற்றம் தந்தன.
ஆணவம் அகற்றி பொதுமை சமூக அக்கறை தந்தன.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக -த்தன.
அடிமை, ஆண்டான் இடைவெளி போக்கின.
தவறி தடம் புரண்டவர்களுக்கு திடன் தந்து ஊக்கமளித்தன.
எங்கெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைத்ததோ, எங்கெல்லாம்
மக்கள் கூட்டமாக, தம்மைத் தேடி வருகிறார்கள் என்று எண்ணினாரோ
அங்கெல்லாம் அவரது போதனைகள் இறைவாக்கினர்களின்
போதனைகளைப் போன்று மக்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும்
ஆழப்படுத்தின. வெள்ளமெனப் பொங்கிவந்த போதனைகள் மக்கள்
மனதில் ஆங்காங்கே தடயங்களை ஏற்படுத்தாமலில்லை.
சாதாரண, சாமானிய, அன்றாடக் கூலிகளாக, மடமையுடன்
வாழ்ந்து வந்த மக்களுக்கு இவரது போதனை மனமாற்றத்துடன்
புதுவாழ்வையும் தந்தது. இறையாட்சியின் விழுமியங்களை
ஏற்றுக்கொண்டு மக்களை பிறருக்காக வாழ அழைத்தது. திருமுழுக்கு
பெற்றபின் ஏழு ஆண்டுகள் கிறித்தவ மறையை மக்களுக்குப்
போதித்தார். தனக்கு கிறித்தவ மதத்தில் கிடைத்த மகிழ்ச்சிபற்றி
கண்ணில்பட்டவர்களோடு விடாமல் பகிர்ந்து கொண்டார். இதனால்
பலர் மனம் மாற காரணமாக அமைந்தார்.
இறைவனின் தூய்மைத் தன்மையை தகுந்த சான்றுகளுடன்
மக்களுக்குப் போதித்தார். திருத்தூதர் பவுல் உரோமைச்
சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தபோதும் அச்சமின்றி
கிறித்துவைப் பற்றி எடுத்துரைத்தது போல, இவரும் சிறையில்
இருந்தபோது சாதி மத பேதமின்றி தம்மை நாடி வந்த அனைவருக்கும்
மிகவும் துணிவுடன் நல்ல அறிவுரைகளைப் போதித்தார்.
கிறித்தவ மக்கள் இவரது போதனைகளால் அரசருடைய
கொடுமைகளுக்குப் பயந்து கிறித்தவத்தை மறுத-த்திருந்தாலும்
தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு இறைஇயேசுவில்
உறுதி அடைந்தார்கள். இவருடைய போதனைகளாலும்,
அறிவுரைகளாலும் மக்கள் கிறித்தவ மதத்தைக் கைவிடவில்லை என
அரசரும், காவலர்களும் கவலை கொண்டார்கள்.
இவரது போதனைகள்
திரைகடலோடி தேடிய திரவியம்
கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளம்
கட்டுப்படுத்த முடியா கடல் சீற்றம்
எட்டமுடியா செவ்வானக் கதிரவன் - அது
உயிருடன் உலாவந்து கொண்டிருக்கும் உன்னத சுவாசம்.
இறைத் தத்துவங்களுடன் கூடிய எதார்த்த உண்மையை
மக்களுக்கு இவர் போதித்தார். தன்னுடைய போதனைகளால் தனக்கு
வரப்போகும் துன்பங்கள்பற்றி தெரிந்திருந்தும் அவர் துவண்டு
விடவில்லை. தண்டனைக்காக கிராமங்களுக்கு இழுத்துச் செல்லப்
பட்டபோதும் மக்களுக்கு வார்த்தையான இறைவனை போதித்தார்.
தான் கொடுமைப்படுத்தப்படும்போது தூய ஆவியாரின்
துணை நாடினார். காவல் தெய்வமாக மிக்கேல் அதிதூதரை
துணையாகக் கொண்டு பயணித்தார். இவர் தன் போதனையை தனது
இல்லத்தி-ருந்து தொடங்கினார். திருமுழுக்கு தந்த புதுத் தெம்பில்
தன் மனைவியிடம் சென்று தான் ஏற்றுக்கொண்ட மறையின்
நிறைவை பொருள்பட விளக்கினார். மனைவியின் மனமாற்றத்திற்குக்
காரணமானார். தொடர்ந்து தன் மாமியாருக்கும், தன்னுடன்
பணியாற்றிய அரசவைப் பணியாளர்களுக்கும், தன் குடும்பத்தாருக்கும்,

நண்பர்களுக்கும் இறைவனின் ஆசியுடன் போதித்தார். அரசருக்கும்,
அந்தணர்களுக்கும் போதித்தார். தான் விசாரணைக்காகக் கொண்டு
செல்லப்பட்ட தாலுகா அதிகாரிகளிடமும் இறையாட்சியின்
இனிமையை எடுத்துரைத்தார். வாடா மலராய் மணம் வீசி மன்னன்
இயேசுவின் மகிமையைப் பரப்பினார்.

i) மனைவியின் மனமாற்றப் போதனை
தனது மனைவியின் மனமாற்றத்தில் மனிதர் யார் என்றும்,
கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை நாம் எவ்வாறு புதுப்பித்துக்
கொள்ள வேண்டும் என்றும் போதித்தார்.
""மனிதன் உடல் சுகங்களுக்காக படைக்கப்பட்டவன் அல்ல.
கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தார். கடவுளின் சாயலாக
மனிதனைப் படைத்தார். அவரை ஆராதிக்கவும் அறியவும் முடிவில்
அவரோடு நித்தியமாய் வாழவும் மனிதர்களைப் படைத்தார்.
ஒவ்வொருவரும் தனது விசுவாசத்திற்குத் தகுந்தவாறு கடவுளை நம்
தந்தையென்று புரிந்துகொள்ள வேண்டும்''.
""எளிய மனத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு
அவர்களுடையதே'' என்ற அவரது போதனையின் சாரம் விண்ணரசின்
விதைகளை மனதில் பதியம் போட்டது.
தூய ஆவியின் துணையோடும் இறைவனின் அருளோடும்
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஞான அறிவை
இறைவனே வழங்கியுள்ளார். அதி-ருந்து நாம் அவரின்
கட்டளைகளை கவனமுடன் கடைபிடித்து குற்றமற்ற நீதிமானாக
பிறருடன் பகிர்ந்து வாழும் மனநிலையைப் பெற்றவராய் வாழ
வேண்டும்'' என்று பொருள்பட போதித்தார்.
மேலும் நிறைவாழ்விற்கும் நிலைவாழ்விற்கும் அடித்தளமான
இறைவனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ""இறைமனித உறவுகள்
நமது பாவங்களை நீக்கித் தூய்மைபடுத்தவே'' என்ற அவரது உறவுகள்
வழியான பார்வையும் மனைவியைச் சிந்திக்க வைத்தது. மனிதனே
உயர்ந்த படைப்பு அவன் எப்பொழுதுமே ஒரேக் கடவுளை
ஆராதிக்கவும்; அவருடன் எப்பொழுதுமே இருக்கவும்வேண்டும். எல்லா
தவறுகளையும் மன்னித்து நம்மை ஏற்றுக்கொண்ட இறைவன்போல
நாமும் பிறரை மன்னித்து மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். ""உண்மை
தெய்வம் ஒருவரே, அவரே நம் கடவுளாகிய தந்தை'' என்ற அவரது
போதனையின் மையக்கருத்தும் மனைவியை சிந்திக்கத் தூண்டியது.
""அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்க்கையை நாம்
வாழவேண்டும். நல்லவரும் நன்மை நிறைந்தவருமான கடவுள்
எப்பொழுதும் நம்மோடு இருக்கவேண்டும். கண்மணியே நீ
கருணையுள்ள இயேசு கிறித்துவோடு மனம் கனிந்துருகி வாழ
வேண்டும். அதுவே என் ஆவல்'' என மனைவியின்
மனமாற்றத்திற்காகப் போதித்தார். இறை ஊழியர் தேவசகாயத்தின்
ஆழ்ந்த சிந்தனையில் இறைவனின் இனிமையை உணர்ந்தவராய்
அவரது மனைவி கிறித்தவ மதத்தைத் தழுவினார்.
ii) மாமியாருக்குப் போதனை
மகளிடம் இறை ஊழியர் தேவசகாயத்தின் மனமாற்றத்தைப்
பற்றிக் கேட்டு தெரிந்துகொண்ட அவருடைய மாமியார்
கிறித்தவத்தை விட்டு விலகிவிடும்படி கூறினார். அதைக் கேட்ட
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனதில் எந்தவொரு மாற்றமும்
ஏற்படவில்லை. தன் மாமியாருடன் அவரது உறுதியான நிலைக்கு
ஏற்றவாறு போதித்தார். உண்மையை விளக்கிக் கூறினார்.
""வாழ்க்கை முழுவதும் இருளில் வாழ்ந்தவர்களுக்கு அதிகக்
குளிர்ச்சியான சந்திரனின் ஒளிகூட கண்களுக்குக் கூச்சமாக
இருக்கும். கட-ல் வாழும் மீன்களுக்குத் தண்ணீர் ஒரு பாரமாக
இராது என்று இறை ஊழியர் தேவசகாயம் கூறிய வார்த்தையின்
பொருள் புரிய முடியாத நிலையில் மாமியார் தவித்தார்.

iii) குடும்பத்தாருக்கு அலகையின் சூழ்ச்சி பற்றிய போதனை
""அலகையின் தந்திரத்தால் பாவச் செயல்களில் பலவீனமான
மக்களை மீட்க இறைவன் மனுவானார். தனது சாயலாக படைக்கப்பட்ட
மனிதனை பாவச் சாவிற்கு உட்படுத்தமாட்டார். ஒற்றுமையுடன் வாழ்ந்து,
அயலாரை அன்புசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். சாத்தானின்
செயல்களால் தான் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். எல்லாம் வல்ல
இறைவன் ஒருவரால் மட்டுமே நம்மை அனைத்தி-ருந்தும் மீட்டுக்
கொள்ள முடியும். அவரே நமது வழியும் கேடயமும்'' என்றார்.
இறைவன் ஒருவரால் மட்டுமே சாத்தானை வீழ்த்த முடியும்.
நாம் உண்மையான இறைவனின் இதயத்தை ஏற்க மறுத்து
மூடப்பழக்கத்தினால் மடமையான செயல்களை செய்துக்
கொண்டிருக்கிறோம். இது மாற வேண்டும் என்றார்.
iv) உறவினர்களிடத்தில் ஆன்மா பற்றிய போதனை
கைது செய்து கொண்டு போகும் வழியில் சில உறவினர்கள்,
""அரசக் கட்டளைகளைக் கடைபிடித்து கிறித்தவ மதத்தை
விட்டுவிட்டால் இழந்ததை மீண்டும் பெறலாமே'' என்று கூறியபோது
அவர்களுக்கு இறை ஊழியர் தேவசகாயம், ""அனைத்து உலகத்தையும்
படைத்து, பாதுகாத்து, அதனை நினைத்த நிமிடத்தில் அழிக்க சக்தி
படைத்த பரம்பொருளான இறைவனை அறிந்து ஆராதித்து அவரது
ஞானக் குழந்தைகளாக வாழ்க்கையில் வெற்றி பெறும் எவரும்
விண்ணரசில் அழியாத மகிமை பெறுவார்கள். இந்த உலகில் உயர்ந்த
கோத்திரத்தில் பிறந்து, அன்புக்குப் பாத்திரமாக வளர்ந்து, அதிகார
மகிமை நிறைந்த வேலையும் செய்து உலகப் பெருமையுடன்
வாழ்ந்தாலும் இறுதியில் அவனது ஆன்மாவிற்கு சாந்தி
கிடைக்கவில்லை என்றால் அதனால் வரும் பயன் என்ன?
ஆகையால் உலக அரசர்களால் எவ்விதத் துன்பங்கள் அனுபவிக்க
வேண்டியிருந்தாலும் ஒருபோதும் இறைவனை நான் மறுத-க்க
மாட்டேன்'' என்று போதனைவழி பதில் கூறினார்.

v) மக்களுக்கான போதனை
இராமன்புதூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இறை
ஊழியரைப் பார்க்க வந்த மக்களுக்கு பகிரங்கமாக இறைவனின்
இரக்கத்தை விளக்கிப் போதித்தார். தன் மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கும், பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திறன்பட
தனது போதனையை எடுத்துக் கூறினார்.
கிறித்தவர்களிடம் ""எத்தகைய துன்பம் நேரிடினும் நீங்கள்
கலங்காதிருங்கள். இவ்வுலகில் நமக்கு எதிராக வரும் தண்டனைகள்
அனைத்தும் நமது விண்ணக சாதனையாக மாறும். இந்த உண்மையை
இறைமகன் இயேசு நமக்குக் கல்வாரிப் பாடுகள் மூலம்
உணர்த்தியுள்ளார். அவர் சிந்திய இரத்தம் நாம் மீட்பு பெற உதவியாக
இருக்கிறது'' என்றார்.
நடைபயணக் கொடுமைக் காலங்களில் வழி நெடுகிலும்
இருந்த மக்களிடம் மனிதன் தோன்றிய வரலாறு, அலகை செய்த
சூழ்ச்சி, அதனால் மனிதனுக்கு வந்த கேடுகள், அதனைப் போக்க
நம்மை மீட்ட இயேசுவின் இரக்கம் போன்றவற்றை போதித்தார்.
பகிர்வு, பணிவு, உறவு, மன்னிப்பு, ஒரே கடவுள், உண்மை, நீதி,
சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சியின்
விழுமியங்களை நிறைவாய் போதித்தார்.
vi) சமத்துவம் பற்றிய போதனை:
""கடவுள் ஆதாம், ஏவாள் என்ற ஆரம்பகால மனிதர்களை
பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார். மனிதர்களில் உயர்ந்தவன்
என்றோ, தாழ்ந்தவன் என்றோ, அடிமைகள் என்றோ, உரிமைக்
குடிமக்கள் என்றோ எவரும் இல்லை. அனைவருக்குமே ""அப்பா''
என அழைக்கும் உரிமையைத் தந்துள்ளார். எங்கும் நிறைந்து
செயல்படும் நம் கடவுள் மிகவும் அன்பானவர். அனைவரையும்
சமமாய் மதிக்கும் பண்பை நாம் அவருடைய மகனிடமிருந்து அறிந்து
கொள்ள வேண்டும்'' என போதித்தார். போதனையின் பயனாக
உயர்குடி மக்கள் என்று எண்ணியிருந்த பலரும் மனம் மாறி
சமத்துவமான வாழ்க்கையுடன் சமாதானமாக வாழத்
தொடங்கினார்கள்.
vii) சகோதரத்துவம் பற்றிய போதனை
""மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற
எண்ணத்திலிருந்து தவறாக வழிநடத்தி போலியான உயர்வு
தாழ்வுகளை அலகை உலகில் உருவாக்கத் துடிக்கின்றது.
மனிதர்களுக்கு பேராசையைத் தந்து உலகைச் சீரழியச் செய்கிறது.
சாதி, இன வேறுபாடுகளை மனிதர்கள் மறந்து சகோதரத்துவ
நெறியுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்'' என்ற இவரது
போதனை பலருக்கும் மாற்றம் தந்தது.
""ஆசைகள் மனிதனை அழிவுக்கு அழைத்துச் செல்லும்.
சகோதரத்துவ பாசம் ஒன்றே மனிதனின் பாதையை செம்மையாக்கும்.
அனைவரையும் சகோதர சகோதரிகளாக நினைத்து ஒரே மனதாக
வாழ்வோம்'' என்று சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை தனது
போதனைகளின் வழி விளக்கினார்.
viii) பத்துக் கட்டளைகளுடன் கூடிய போதனை
கடவுள் ஒருவரே. அவர் ஒருவருக்கே வழிபாடு செய்யுங்கள்.
தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். கொலை செய்யாதே,
களவு செய்யாதே, உழைப்பதற்கு ஏற்ற ஊதியம் கொடு. பிறர்
வீட்டையோ, பொருட்களையோ, மனைவியையோ விரும்பாதே என்று
மோசே வழியாகக் கடவுள் கொடுத்த கட்டளைகளைப் போதித்தார்.
ஏழைகளைத் துன்புறுத்தாதே, அநியாய வட்டி வாங்காதே என்று
போதித்தார். பொய் செல்வதையும், பழிவாங்குவதையும் கண்டித்துப்
போதித்தார். கடவுளின் பிள்ளைகளாகிய மனிதர்கள் அனைவரும்
சகோதர சகோதரிகள் என்று போதித்து அதனைத் தானும்
கடைபிடித்தார்.
ix) சாதிகளைத் தாண்டிய போதனை
""சாத்தானை வெல்லும் ஒரே கடவுள் இயேசு கிறித்துவே.
இயேசுவும் அவரது போதனைகளும் நமக்கு அன்னியமானதல்ல!
அடிமைகளுக்கும் ஈனர்களுக்கும் உரியது கிறித்தவம் என சாதியைச்
சொல்- சிலர் வயிறு பிழைக்கச் செய்வது தவறு'' என்று போதித்தார்.
""கீழ்சாதி, மேல்சாதி என்ற பேதங்களை நாம் கூண்டோடு
ஒழிக்க வேண்டும். கடவுள் என்னும் சக்தி அனைவருக்கும் சொந்தம்.
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். சாதிகளைக் கடவுள்
உருவாக்கவில்லை. மனிதர்கள் உருவாக்கியதை அவர்தான்
அழித்தார். சமயங்களின் பெயரால் சாதிகளை உருவாக்கி நாம்
அடிமையாக இருப்பதை அவர் விரும்பவில்லை'' என்று சாதிகளைக்
கடந்த இவருடைய போதனை பலரை மனம் மாற்றியது.
x) ஒரே கடவுள் போதனை
""உயர் குலத்தோருக்கு ஒரு கடவுள், இழிகுலத்தவருக்கு
இன்னொரு கடவுள் என்பது சரியா? கடவுள் ஒருவரே!
அவர் மக்களனைவரின் தந்தை. சாதிக்கொரு கடவுள் என்பதில்லை.
மூவொரு ஆளாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருந்து செயல்படுகிறார்.
உலகம் ஒன்றே கடவுளும் ஒன்றே. கடவுள் ஒருவரே அவர் தூயவர்''
என மனதார இறைவனைப் போதித்தார். ""எல்லா மனிதர்களுக்கும்
பொதுவான காற்றும், மழையும், சூரியனும், சந்திரனும், பூமியும், வானமும்
படைத்துத் தந்து பராமரிக்கும் கடவுள் ஒருவரே'' என்று போதித்தார்.
xi) அன்னை மரியாள் பற்றிய போதனை
இறை ஊழியர் தேவசகாயம் அன்னை மரியாள் மீது
பக்தியுடையவர். ""அவள் பட்ட வியாகுலங்களை எண்ணி மனம்
வருந்தும் கத்தோ-க்கக் கிறித்தவர்கள் அனாதைகளல்ல. நமது
தாயினும் மேலான ஒரு தாய் உண்டு. அவள் பாவிகளை கரை
சேர்ப்பவள், துயர் தீர்ப்பவள், அயர்வு நீக்குபவள்'' என்று தம்மைப்
பார்க்க வந்தவர்களிடம் எடுத்துரைத்தார்.
திருவனந்தபுரத்தில் தன்னைக் காணவந்த மனைவியிடம்,
""விண்ணும் மண்ணும் படைத்த ஆண்டவரின் அன்னையான மாமரித்
தாயின் வியாகுலங்களை எண்ணி தவம் செய். தேவ அன்னையின்
ஆறுதல் உறுதியாக உனக்குக் கிடைக்கும்'' என்று கூறி
அன்னையிடம் மனதார செபித்தார். இறுதியாக தன் உயிர் உடலை
விட்டுப் பிரியும் நேரத்தில் ""மாதாவே! எனக்கு அருள் புரியும்'' என்ற
வார்த்தைகள் அவர் வாயினின்று உதிர்ந்தன.
xii) தாழ்ச்சி பற்றிய போதனை
தாழ்ச்சியான மனநிலையுடன் இறைவன்முன் செபிக்க
வேண்டும். தன் நிலையிலே தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று போதித்தார்.
""தூய்மையானதும் நீதி நிறைந்ததுமான முறையில் மனித புத்தி
பயன்பட வேண்டுமெனில் ஒருவருக்கு தூய ஆவியின் அருள்
வேண்டும். அதற்கு தொடக்கம் முதலே தனது அரைகுறை
அறிவினை நினைத்து, "ஆண்டவரே நான் பலவீனன். நான்
பேசுவதும், செய்வதும் உமக்கு விருப்பமுடையதாக இருக்க எனக்கு
அருள்புரியும்' என்னும் தாழ்மையான வேண்டுதலோடு தான்
நம்முடைய அனைத்து சிந்தனைகளையும் இயக்க வேண்டும்'' என்று
போதித்தார்.
xiii) மனைவியிடம் இறுதி போதனை
ஆரல்வாய்மொழியில் தன்னை தேடிவந்த தன் மனைவியிடம்
தேவசகாயம் நம்பிக்கையூட்டும் போதனையை போதித்தார்.
""இறைவன் பட்ட பாடுகளை நாம் அறிவோம். அவர்
நமக்காக பாடுபட்டார். குற்றமற்றவராகக் காணப்பட்ட பின்பும்
குற்றவாளியை விடுதலை செய்து கிறித்துவை சிலுவையில் அறைந்து
கொல்லச் சொன்னார்கள் என்பதை அறிவாயல்லவா? சமாதானம்
உன்னோடு இருக்கட்டும். முறையான சமாதானத்தினாலன்றி
இறைவனைக் காண முடியாது என்றார்.

அமைதியிழந்து போரும், சண்டைகளுமாகக் காணப்பட்ட
அந்நாட்களில் சமாதானமும், அமைதியும் எவ்வளவு முக்கியம் என
இறை ஊழியர் தேவசகாயம் உணர்ந்திருந்தார். இதன் மூலம்
""இறைவா அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்'' என்ற
தூய பிரான்சிஸ் அசிசியாரின் செபத்திற்கு ஏற்ப அமைதியின்
கருவியாகத் தன்னை இறைவனுக்குக் கையளித்தார்.
போதனைகளின் விளைவாக மக்கள் இவரை ""ஒரு தெய்வீக
மனிதர்'' என்று உணர்ந்து கொண்டார்கள். இவருடைய பேச்சையும்,
போதனையையும், உண்மையையும் கேட்ட தாலுகா அதிகாரிகள் கூட
இவரைத் தண்டிக்க மனமில்லாமல் இருந்தார்கள்.
புனித சவேரியார் பாதம் பதிந்த இம்மண்ணில் அவருக்குப்
பிறகு இறைவனை இல்லங்களிலும் இதயங்களிலும் எடுத்துச் சென்ற
மாபெரும் பெருமை இறை ஊழியர் தேவசகாயத்தையே சாரும். வேறு
மதத்தவராய் இருந்து கிறித்தவ மறையைத் தழுவி, விவி-யத்தைக்
கற்று, இறைவார்த்தைகளைக் கேட்டு மனம்மாறி, மனிதர்களின் மனம்
மாற்றி தன்னுடைய போதனையால் விவி-யத்தை விளக்கிய
இவருக்கு இறைவனுடைய கொடை இல்லாமல் இல்லை.
இறை ஊழியர் தேவசகாயம் போதனைகளின் சிகரம்.
அவர் எல்லாருக்கும் போதித்தார். இயற்கையோடும் இணைந்து
போதித்தார். நல்ல கருத்துகளை மக்கள் முன் எடுத்துரைத்தார்.
மக்களும் மனந்திரும்பினார்கள். நீயும் இறைவனின்
போதனையைக் கேட்டும், தேவசகாயத்தின் போதனைபடியும் வாழ
வேண்டும். எனது விருப்பம் அதுவே. பெரியவர்கள் சொல்வதைக்
கேட்க வேண்டும். தாழ்ச்சியுடன் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
இதனைப் படித்து அடுத்தக் கடிதத்தில் உனது பதிலைக் குறிப்பிடு.
உன் அன்புள்ள,
மாமா.


24-02-2010
நாகர்கோவில்
அன்புள்ள மாமாவுக்கு,

பாசமும் நேசமும் கொண்ட தேன்மொழி
எழுதுவது, மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள்
கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன். நீங்கள் அனுப்பிய இசைக் குறுந்தகடும் கிடைத்தது. அனைத்துப் பாடல்களும் நன்றாக உள்ளன.
நான் இங்கு நன்றாக படிக்கிறேன். நிறைய மதிப்பெண்கள்
கடந்த தேர்வில் பெற்றிருக்கிறேன். உங்களைப் போன்று நானும்
ஒரு பொறியியல் வல்லுநர் ஆக வேண்டுமென்று அம்மா அடிக்கடி
சொல்-க் கொண்டே இருப்பார்கள். எனக்கும் அந்த ஆசை
இருக்கிறது. அதற்காக நன்றாக படித்து வருகிறேன்.
பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அவர்களுக்குக் கீழ்படிந்து
நடக்கிறேன்.
இறை ஊழியர் தேவசகாயத்தின் போதனைகளைப் பற்றி
படித்தேன். எவ்வளவு ஓர் ஆழமான அர்த்தமான சிந்தனை.
"வாழ்விழந்தவருக்கு வாழ்வுக் கொடுத்தது' என்று எழுதியிருந்தீர்கள்.
அது மிகவும் எனக்கு பிடித்தது. நானும் பகிர்வு, சமாதானம், சகோதரத்துவம்
என்ற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன்
மாமா. என்னுடைய பள்ளித் தோழிகளுக்கும் தேவசகாயத்தைப் பற்றி
சொன்னேன். அவர்களும் ஆர்வமாகக் கேட்டார்கள்.
இவரின் போதனைகள் இயற்கையோடு இணைந்த
போதனைகளாக இருந்ததைக் குறிப்பிட்டீர்கள். அதைத்
தெளிவாகக் குறிப்பிடுங்களேன். அதைகுறித்து அதிகம் அறிய
ஆசைப்படுகிறேன். அடுத்தமாதம் எனக்கு முழு ஆண்டுத் தேர்வு
வருகிறது. தம்பிக்கும் அடுத்தமாதம் தான்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி

 


கடிதம் 4 இயற்கையும் இறைஊழியரும்

03-03-2010
பெங்களூர்

அன்புள்ள தேன்மொழிக்கு,

பாசமிகு மாமா எழுதுவது, கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
மிக்க மகிழ்ச்சி, தேர்வை நல்ல முறையில் எழுதவும். மனப்பாடம்
செய்யாமல் முடிந்த அளவிற்கு புரிந்து படிக்கவும். சந்தேகங்கள்
இருந்தால் ஆசிரியரிடமோ, அம்மாவிடமோ கேட்டுத் தெரிந்து
கொள். இரவில் சீக்கிரம் தூங்கு. அதிகாலையில் சீக்கிரமே
எழுந்து படி. அதுதான் உடலுக்கு நல்லது.
இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கையை இறை
ஊழியர் தேவசகாயம் வாழ்ந்தார். தான் கொண்டுச் செல்லப்பட்ட
இடங்களிலெல்லாம் மரங்களிலும், மலையின் பாறைகளிலும்
கட்டி வைக்கப்பட்டார். அதைப்பற்றி ஒரு தெளிவானக் குறிப்பை
இங்கே வரிசைபடுத்துகிறேன்.

இறை ஊழியர் தேவசகாயம் இயற்கையை மிகவும் நேசித்தார்.
தான் கட்டி வைக்கப்பட்ட மரத்தடியில் இவர் போதித்ததால் பட்ட
மரங்களும் தளிர் விட்டன. மலைகளிலும் மக்களுக்கு போதித்ததால்
அவைகளும் இவருடன் நெருங்கிய தொடர்புடையவனவாக
மாறியதைப் பார்க்க முடியும். இயற்கையும் இவரது போதனையைக்
கேட்டது. மரங்கள் இவரது போதனை மேடைகளாக மாறின.
மரங்களுக்கும் இவர் போதித்தார். போதி மரத்தடியில் புத்தர் ஞானத்தைப்
பெற்றார். இயற்பியல் மேதையான நியூட்டன் புவிஈர்ப்பு விசையை
மரத்தடியில் கண்டறிந்தார். இறைமகன் இயேசுவும் மரச்சிலுவையில்
மரணமடைந்தார். இவரும் கிராத்தடியில் தூக்கிச் செல்லப்பட்டு
மலைமேல் மரணம் அடைந்தார். இவரது போதனையைக் கேட்டு
மலர்ந்த மரங்கள் இன்றும் மனிதருக்கு பயன்படுகின்றன.
புள்ளினங்களைப் பார்த்து போதித்த தூய ஐந்து காய
பிரான்சிஸ் அசிசியாரைப் போல், கட-ன் மீன்களுக்குப் போதித்த தூய
அந்தோணியாரைப் போல் -களுக்குப் போதித்த தூய மார்ட்டின்
தே போரசைப் போல் இவரும் மரங்களுக்குப் போதித்தார். மரங்களும்
இவருடன் நெருங்கிய தொடர்புடையவையாக மாறின.
இங்கே இறை ஊழியர் தேவசகாயம் கட்டிவைக்கப்பட்ட
மரங்களையும் இடங்களையும் வரிசைப்படுத்துகிறேன்.
i) பட்ட வேப்பமரம்: பெருவிளை
பெருவிளையில் பட்ட வேப்பமரத்தில் கட்டி வைத்தார்கள்.
இரவில் பாம்புகள் படையெடுத்து இறை ஊழியர் தேவசகாயத்தை
வலம் வந்தன. பின்னர் சில பாம்புகள் வரிசை வரிசையாக வயல்
பகுதியைக் கடந்து மறுகரைக்குச் சென்றன. எஞ்சிய பாம்புகள் பகல்
வேளையில் வரிசையாக அவ்விடத்தி-ருந்து நகர்ந்தன. ஆனால்
அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. இந்த பட்ட மரம் தளிர்த்து
வெயிலும் பனியும் அவர் மேல் படாதவாறு குடை போல் அவரைக்
காத்தது.
இந்த மரத்தடியில் இறை ஊழியர் தேவசகாயம் போதித்தார்.
இறைவரம் பெற்றவராய் இவரைக் காணவரும் நோயாளிகளையும்,
ஏழை எளிய மக்களையும் பார்த்து அவர்களுக்காக இறைவனை
மன்றாடி நோயி-ருந்தும், துன்பத்தி-ருந்தும் காத்தார். புதுமைகள்
செய்ய இந்த மரத்தடியும் ஓர் இடமாய் அமைந்தது. மக்களுக்குப்
போதித்து இளைப்பாற இடமும் தந்தது.
ஆராச்சாருக்குக் குழந்தைப்பேறு கிடைக்க மன்றாடிய
இடமும் இந்த மரத்தடி தான். ஆட்டிடையர்கள் இறந்த ஆட்டினை
உயிருடன் பெற உதவியதும் இந்த மரத்தடிதான். வெயிலையும்,
மழைச்சாரலையும் பொருட்படுத்தாமல் மக்கள் இவரைத் தேடிவந்து
போதனையைக் கேட்ட மரத்தடியும் இதுதான். பல மதத்தவர்களும்,
குலத்தவர்களும் மதம் மாறக் காரணமாக இருந்ததும் இந்த
மரத்தடிதான். மரத்தடியில் இருந்து ஆராச்சார் அமைத்துக் கொடுத்த
குடிலுக்கு மாற காரணமாக இருந்ததும் இந்த மரத்தடியில் அவர்
செய்த போதனைகளும் செபங்களும் தான். இந்த மரத்தின் இலையை
நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் இன்றும் உண்டு வருகிறார்கள்.
ii) பூவரசு மரம்: திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் பாளையம் திடலில் அவரைப் பூவரசு
மரத்தடியில் கட்டி வைத்தனர். இங்குதான் அவர் சாத்தனை வென்று
வானதூதரைக் கண்டார்.
"தேவமகிமைக்குப் பாத்திரமான தேவசகாயமே! உமது
மன்றாட்டு ஆசீர்வதிக்கப்பட்டது மூன்று ஆணிகளில் தொங்கி
இவ்வுலகை மீட்ட ஆண்டவர் ஆன்மாக்களின் மீட்பிற்காக உம்மை
ஆசீர்வதிக்கிறார். நீர் பொறுமையோடு இதைத் தாங்கிக் கொள்ள
இயேசு கிருபை புரிகிறார். சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ளும்.
இது ஆண்டவரின் திருச்சித்தம். உமக்காக ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கும் மோட்ச பாக்கியத்தை பெற சீக்கிரம்
அழைக்கப்படுவீர்'' என்றார் வானதூதர்.

மரியாவை வாழ்த்திய வானதூதர், தேவசகாயத்தையும்
வாழ்த்தத் தவறவில்லை. வானதூதரின் வாக்கு நிறைவேறியது.
கடவுளுக்காக ஆயத்தமாக இருக்கும்படி இவர் அறிவுறுத்தப்பட்டது
இந்த மரத்தடியில்தான். துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு
இறைதிருவுளத்தை நிறைவேற்ற இறைவனால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட
இடமும் இந்த மரத்தடிதான். மோசேயை முட்புதரில் அழைத்த இறைவன்
தேவசகாயத்தை இந்தப் பூவரசு மரத்தடியில் அழைத்தார். சாத்தானையும்,
பேயையும் ஓட்டும் திறமை பெற்ற இடமும் இந்த மரத்தடிதான்.
இறைவனோடு உறவாடியதும் பல நாட்களாகக் காண முடியாமல்
தவித்த தன் மனைவியைக் கண்டு உரையாடியதும் இந்த மரத்தடிதான்.
iii) பூவரசு மரம்: ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழியில் மங்கம்மாள் சத்திரம் பக்கத்தில் பூவரசு
மரத்தடியில் கட்டி வைத்தனர். இங்கு வந்த மக்களுக்கு இவர்
போதித்தார். இடைவிடாமல் இந்த மரத்தடியில் செபம் செய்தார்.
நோயாளிகள் நலம் பெற்றனர். வியாபாரிகள் லாபம் பெற்றனர்.
விவசாயிகள் பலன் பெற்றனர். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து
அவரைப் புனிதராக வழிபடத் துவங்கினர்.
புண்ணியவாளன் மண்ணில் புதையப் போகிறாரே!
உண்மையை ஊருக்கு உரைத்த இவர் உறக்கம் கொள்ளப் போகிறாரே
என்ற ஏக்கம் இந்தப் பூவரசு மரத்திற்கு இருந்திருக்க முடியும்.
தன்னை விட்டுப் போகும் போது மண்ணை விட்டுப்
போகிறாரே என்று அழுதிருக்க முடியும். விண்ணக வாழ்விற்கு வழி
அனுப்பி வைத்ததும் இந்த மரத்தடிதான். தன் மனைவியுடன் இறுதி
உரையாடல் நடந்ததும் இந்த மரத்தடி தான். காற்று, மழை, பனி, குளிர்,
வெப்பம் என அனைத்தி-ருந்தும் இவரைப் பாதுகாத்ததும் இந்த
மரத்தடிதான்.
ஆள் துணையில்லாத போது ஆதரவாக இருந்தது,
தலைசாய்க்க தன் மடியைக் காட்டியது,
தன் அசைவில் தலைவனுக்குத் தாலாட்டு பாடியது,
தனிமையில் நண்பனாக, உறவினராக துணை நின்றது.

iv) ஆலமரம்: காற்றாடிமலை
காற்றாடிமலையில் சுட்டுக் கொல்லப்பட்டபோது இறை
ஊழியர் தேவசகாயத்தின் உடல் கிடந்த இடத்தில் உள்ள ஆலமரம்
அவருக்கு நிழல் தந்து தனது கிளையின் தனித்தன்மையைப் பெற்றது.
மறைசாட்சியின் உடலுக்கு நிழல் தந்து தனது பெயரையும்
மறைசாட்சியின் வரலாற்றில் இணைத்தது இந்த ஆலமரம்.
இவரது இறப்பிற்குப் பின் இவருடைய போதனைகள் எங்கும்
வியாபித்து வளரும், தூண் போல திருச்சபையைக் காக்கும் என்ற
சிந்தனையில் கூட இந்த ஆலமரம் அவருக்கு அருகில் நின்றிருக்க
முடியும். கிறித்தவ மதத்தைத் தழுவியதி-ருந்து இந்த மாமனிதன்
இதுவரை நிம்மதியாகத் தூங்கியதில்லையே. இப்போதாவது நன்றாகத்
தூங்கட்டும் என்று தாலாட்டு பாடி நின்றிருக்கலாம் இந்த மரம். இந்த
ஆலமரமும் இவரது மரணத்திற்கு சாட்சியானது.
v) குறிஞ்சிக் கொடி
நட்டாலத்தில் இறை ஊழியர் தேவசகாயம் நினைவாகக்
கட்டப்பட்ட நினைவாலயத்திற்கு அருகிலும் ஒரு கொடி செழித்து
வளர்கிறது. இறை ஊழியர் தேவசகாயத்தை வேண்டுதல் செய்து
வருபவர்களுக்கு மருந்தாக பயன்படுவது இந்த கொடியின் இலைகள்
தான். தீராத வாத நோய் மற்றும் புற்றுநோய் உடையவர்களையும்
குணமாக்குவதும் இந்தக் கொடி தான். இன்றும் பக்தர்கள்
நம்பிக்கையோடு நோய் நீக்கும் பண்புடைய இந்தக் குறிஞ்சிக் கொடி
இலைகளை மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.
vi) புலியூர்குறிச்சிமலை பாறை
இறை ஊழியர் தேவசகாயம் அவமானப் பவனியில்
இறைவனிடம் முறையிட்டு வானத்தை நோக்கி செபித்து தன்
கைமுட்டியால் அடித்து தண்ணீர் வரச் செய்ததும் இந்தப் பாறையில் தான்.
இறைவனின் மேல் உள்ள தீராத தாகத்தை தீர்த்துக் கொண்டு முதல்
புதுமை நிகழ்த்தியதும் இந்தப் பாறையில்தான். வற்றாத நீரூற்று உருவாகி
வானக இறைவனின் அன்பை உணர்த்தியதும் இந்தப் பாறையில் தான்.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வற்றாத
நீரூற்றி-ருந்து தினந்தோறும் மக்கள் புனித நீரை அள்ளிச்
செல்கின்றனர். இறை ஊழியர் தேவசகாயம் வாழ்ந்த காலத்து கட்டிடக்
கலைநயத்தோடு புதிய கோயில் ஒன்று இந்த இடத்தில்
கட்டப்பட்டுள்ளது.
vii) காற்றாடிமலைப் பாறைகள்
இறை ஊழியர் தேவசகாயத்தின் உயிர் பிரிந்தபிறகு பின்புறம்
இருந்த மலையின் பாறைகள் இரண்டாகப் பிளந்ததும் இங்குதான்.
வெண்கல மணியோசை எழுப்பி இறை ஊழியருக்கு துக்க மணி
அடித்ததும் இந்த பாறைகள் தாம். இறப்பதற்கு முன் மண்டியிட்டு
தனது கால் முட்டு முத்திரையை பதித்ததும் இந்த பாறைகளில் தான்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் நீத்ததும் இந்தப் பாறைகளில்தான்.
விண்ணக பயணத்தின் வரவேற்பு நடந்ததும் இந்தப் பாறைகளில்தான்.
இறை ஊழியருக்கு கண்ணீர் வடித்த ""கண்ணீர் பாறை''யும் தணிந்த
குரலில் அழுத ஊமைப் பாறையும் இங்குள்ளது.
இயேசுவைப் போன்று இவரும் ஐந்து காய மகிமையோடு
இறை ஊழியர் மகுடம் பெற்றதும் இந்த பாறைகளில் தான்.
விலங்குகளிடமிருந்தும், மழை, வெயில் என இயற்கையின்
அழிவி-ருந்தும் இறை ஊழியர் தேவசகாயத்தின் உடலைக் காத்ததும்
இந்தப் பாறைகள் தான். இப்பொழுது வானோக்கி நிற்கும் இயேசுவின்
20 அடி சிலையையும் அன்னை மரியின் சுரூபத்தையும் தாங்கி
நிற்பதும் இந்தப் பாறைகள் தான்.
இவர் இயற்கையை நேசித்தார். இயற்கையும் இவரை
நேசித்தது. உனது ஆழமான புரிதலும், அர்த்தமுள்ள
வினாக்களும் என்னை அதிகமாகக் கவர்கின்றன. படித்து புரிந்து
அடுத்தக் கடிதத்தில் பதில் அனுப்பவும்.
உன் அன்புள்ள,
மாமா.



26-03-2010
நாகர்கோவில்


அன்புள்ள மாமாவுக்கு,உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உங்கள் நலம்
அறிய ஆவல். உங்கள் குறிப்பும், இயற்கையின் மேல் உள்ள
பார்வையும், இறை ஊழியர் தேவசகாயம் இயற்கையோடு
இணைந்துள்ளார் என்பதை எனக்குத் தெளிவாகக் காட்டியது.
தேர்வையும் நாங்கள் நல்லமுறையில் எழுதி முடித்திருக்கிறோம்.
இரண்டு மாதங்கள் விடுமுறை. விடுமுறைக்கு அப்பா
எங்களை கொடைக்கானலுக்குக் கூட்டிச் செல்வதாகக்
கூறியுள்ளார். மே மாதம் செல்லலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
மாமா நீங்களும் கொடைக்கானலுக்கு வரலாமே.
உயிர்ப்புக்கானத் தயாரிப்புக்களை நாங்கள் செய்ய
தொடங்கியுள்ளோம்.
இறை ஊழியர் தேவசகாயத்தின் பண்புகளைப்
பற்றி அறிய ஆசைப்படுகிறேன். அவர் எப்படியொரு வாழ்க்கையை
வாழ்ந்தார்? மக்களிடம் எவ்வாறு பழகினார் என்று அடுத்தக்
கடிதத்தில் எழுதி அனுப்புங்கள் மாமா.
கடிதத்திற்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி





கடிதம் 5 உன்னதராய் உயர்த்திய நற்பண்புகள்

04-04-2010
பெங்களூர்

அன்புள்ள தேன்மொழிக்கு,
உன் பாசமிகு மாமா எழுதுவது, கடிதம் கிடைத்தது.
மகிழ்ச்சி அடைந்தேன். நான் நன்றாக இருக்கிறேன். அப்பா,
தம்பி மற்றும் அம்மாவிடம் கேட்டதாகச் சொல். தேர்வு
முடிந்ததால் இப்பொழுது மகிழ்ச்சி தானே! சரி இந்த விடுமுறை
நாட்களை பயனுள்ள முறையில் செலவிடுங்கள். குறுகிய காலப்
பயிற்சி வகுப்பில் சேர்ந்து உங்களது திறமையை மேலும்
வளர்த்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக சுற்றுலாவிற்குச்
சென்று வாருங்கள். எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுப்பது
கொஞ்சம் கடினம். இருப்பினும் முயற்சி செய்கிறேன்.
இறை ஊழியர் தேவசகாயத்தின் பண்புகளை இங்கு
வரிசைப்படுத்துகிறேன்.
இறை ஊழியர் தேவசகாயம் ஒரு நல்ல மனிதருக்கு
எடுத்துக்காட்டு. எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையின் எதிர்முனையை
அடைந்தவர். பாசம், பந்தம், சொந்தம் என அன்பின்
வட்டத்திற்குள்ளும் வாழத் தெரிந்தவர். சமூகம், மக்கள் இறைவன்
என சமுதாய ஓட்டத்திலும் வாழ்ந்து சிறந்தவர்.
திருச்சபையின் உறுப்பினர் என்ற வகையில் தன் கடமையை
இவர் சரிவர செய்து முடித்திருக்கிறார். கிறித்துவின் போதனைப்படி
வாழ்ந்திருக்கிறார். திருச்சபை உலகில் ஆற்றும் பணியில் தன்னை
அர்ப்பணித்திருக்கிறார். மீட்பின் நற்செய்தியை சென்ற
இடங்களிலெல்லாம் அறிவித்தார். மக்களை மூடநம்பிக்கையி-ருந்தும்,
பாவச் செயல்களிலிருந்தும் மாற்று சிந்தனைவழி புனிதப்படுத்தி
புதுமைகளை செய்து வழிநடத்தினார்.
பெருவிளையில் தனக்கு கொடுக்கப்பட்ட
தண்டனையி-ருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்த பிறகும்,
"நான் ஏன் கோழைபோல் ஓட வேண்டும், வேதசாட்சி மகுடம்
பெறுதல் பெரும் பாக்கியமல்லவா இறை இயேசு எனக்காக இரத்தம்
சிந்தி தம் உயிரைக் கொடுத்திருக்கும் போது, நான் ஏன் அவருக்காக
என் உயிரைத் தரலாகாது?'' என்று தன் கொள்கையில் உறுதியாய்
இருந்தார்.
தன் உடைமைகளைப் பிறருக்குப்
பகிர்ந்துக் கொடுத்து மகிழத் தெரிந்தவர்.
அழுகையின் குரல் தனது இறுதிப் பயணத்தின்
ஆவலைக் குறைத்து விடுமோ என்று
அழுகையைக் கூட அடக்கத் தெரிந்தவர்.
இல்லற வாழ்க்கை இலையுதிர் காலமானாலும்
கடவுளுடன் கைகோர்த்த வாழ்க்கையில்
வசந்த காலமாய் மலர்ந்து சிறந்தவர்.
அன்பினால் அவனியை ஆட்கொண்டவர்.
இவர் மனம் மாறிக் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு
நினைத்ததைவிட அதிகமாகவே துன்பங்கள் அனுபவித்தார்.
விமர்சனங்களைத் தாங்கினார். பொறுமையுடன் பலரையும்
எதிர்கொண்டார். ஆத்திரத்துடன் வந்தவர்களை தனது முன்மதியால்
அமைதிப்படுத்தினார். மொத்தத்தில் இவரிடம் இறையாட்சியின்
மதிப்பீடுகள் நிறைந்தே இருந்தன.
அன்பு அருவியெனப் பாய்ந்தது!
பாசம் வற்றாத ஆறானது!
உறவு கடலெனப் பொங்கியது!
நீதி நதி வெள்ளம் போல் ஓடியது!
நேர்மை வெள்ளியருவியெனப் பூத்தது!
சமத்துவம், சகோதரத்துவம் சமமாய் சங்கமித்தன!
i) குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம்
குழந்தைப் பருவத்தில் இறை ஊழியர் தேவசகாயம்
நற்பண்புகள் மற்றும் நற்குணங்கள் நிறைந்தவராக வளர்ந்து வந்தார்.
இதனால் அவருக்குக் கல்வி கற்பித்த குருகுலத்தோரும், நண்பர்களும்
இவரை மிகவும் அன்பு செய்தனர்.
இளமைப் பருவத்தில் அன்பு நாயகன், தர்ம தயாளன், நல்ல
தலைவன் என்று உற்றாரும், உறவினரும் மற்றவர்களும் இவரை
மதித்தார்கள். தீயக் குணங்களோ, அகங்காரமோ இவரிடம் இளமை
முதல் காணப்படவில்லை. உயர்ந்த ஆடை அலங்காரத்தையோ
உல்லாச வாழ்க்கையையோ அவர் விரும்பவில்லை.
ii) பணியில்
அதிகாரிகள் கீழ்சாதியினரைக் கொடுமையாக
நடத்துவதையும், ஏழை மக்களை அடிமைகளாக்குவதையும் சரியான
கூ- கொடுக்காமல் வேலை வாங்குவதையும் எதிர்த்தார்.
ஏழைகளுக்கு கூ-யை ஒழுங்காகக் கொடுத்தார். ஈனர் என்றும்
அடிமை என்றும் மக்களை ஒதுக்கித் தள்ளாமல் அரவணைத்தார்.

iii) ஏழைகள்
ஏழைகளிடம் கருணை உள்ளம் கொண்ட ஒரு துறவியாக
செயல்பட்டார். ஏழைக் கூ-யாள் குடிசை வீட்டி-ருந்து தண்ணீர் பெற்று
பருகினார். தாழ்ந்தவர் என்று அவர் யாரையும் ஒதுக்கவில்லை. சாதி
ஒழிப்பின் முற்போக்கு சிந்தனை இறை ஊழியர் தேவசகாயத்திடம்
இருந்தது. இயேசுவைப் போன்று கருணையும், சாந்தமும் நிறைந்தவராய்
காணப்பட்டார். தன்னுடைய செல்வங்களையும், பொருட்களையும்
உடன் ஊழியர்களுக்கும் உறவினர்களுக்கும் கிறித்தவம் மாறிய பின்பு
பகிர்வை மையமாகக் கொண்டு விட்டுக் கொடுத்தார்.
மக்கள் சிறையில் வாழைப்பழங்கள், அரிசி, தினையரிசி,
சாமையரிசி இவற்றால் செய்த மாவு வகைகள், உணவுகள், துணிகள்,
நாணயங்கள் முத-யனக் கொண்டுவந்து இவருக்குக் கொடுத்தார்கள்.
இறை ஊழியர் தேவசகாயம் அவற்றை தம்மை சந்திக்க வந்த எழை
எளிய மக்களுக்குக் கொடுத்து உதவினார்.
iv) பாடுகளில்
கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட காலத்திலும் அமைதியாக
இருந்தார். எளிமையும், பேரறிவும் நிறைந்த துறவு பூண்ட ஒரு
போதகராக பெருவிளையில் வாழ்ந்தார். அனைவரிடமும்
இன்முகத்தோடு உரையாடினார். பொறுமை நிறைந்தவராய் நீதியில்லா
ஆளுநரின் வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டார். விவாதங்களில்
பணிவான போக்கைக் கடைபிடித்தார். ஆரல்வாய்மொழி சிறையில்
நோயில் வாடித் துன்பப்பட்ட சூழ்நிலையிலும் தங்களுக்காக
செபிக்கும்படி கேட்ட மக்களுக்காக செபித்தார்.
v) காவலருடன்
மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் மகிழ்ச்சியாகக்
காணப்பட்டார். அதற்காக தனக்கு காவல் நின்ற காவலர்களைக்
கூட அவர் கடிந்து கொள்ளவில்லை. பணிவாகப் பேசினார்.
இராமையன் தளவாய் "உன் புதிய மதத்தைக் கடைப்பிடிப்பவர்களை
கழுகுகளுக்கு இரையாக்குவேன்'' என்று எச்சரித்த போது மறுமொழியாக
"புதுநெறியைக் கடைபிடிப்பவர்களைத் துன்புறுத்த வேண்டுமென்று நீர்
விரும்பினால் வேறெங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. இதோ
அவர்களுக்கெல்லாம் முந்தியவன் நானிருக்கிறேன். என்னென்ன செய்ய
வேண்டுமோ அவற்றையெல்லாம் உமது மனம் மகிழுமாறு செய்யலாம்'
என்று கூறினார்.
இறை ஊழியர் தேவசகாயத்திடம் விளங்கிய கனிவும்
தாழ்ச்சியும் காவலர்களைக் கவர்ந்தன. தன்னைக் காண
வந்தவர்களிடம் இவர் கூறிய திடமான விசுவாச வார்த்தைகள்
அவர்களை மலைக்க வைத்தன. காவலர்கள் இறை ஊழியர்
தேவசகாயத்தின் குணநலன்களைக் கண்டு அவர்மேல் பரிவு
கொண்டார்கள். அவர்பால் கவரப்பட்டார்கள். அதனால் தான்
பெருவிளையில் மழையும், வெயிலும், காற்றும் மோதாத பாதுகாப்பான
இருப்பிடத்தை இறை ஊழியர் தேவசகாயத்திற்கு காவலர்கள்
தயாரித்தளித்தார்கள்.
vi) இறை வேண்டலில்
திருச்சபைக்கான பணியில் இவர் திருமறைக் கடமைகளை
சரியாக நிறைவேற்றினார். ஞாயிறு நாள், கடன் திருநாள்
திருப்ப-களில் தவறாமல் பங்கு கொண்டார். 36 கிலோமீட்டர்
தூரமுள்ள வடக்கன்குளத்திற்கு மாதந்தோறும் சென்று திருப்ப-யில்
பங்கு கொண்டார்.
அருட்பணியாளர்களுடைய அறிவுரையைக் கேட்டு மிகவும்
தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அருட்பணியாளர்கள் இறை ஊழியர்
தேவசகாயத்திடம் இருந்த பொறுமை, மனத்துணிவு, மகிழ்ச்சி, ஆன்மத்
தூய்மை முதலான நற்பண்புகளைப் பார்த்து வியப்புற்று
அகமகிழ்ந்தார்கள். செபங்கள் சொல்வதையும், ஒரு நாளில் ஐந்து
முறையாவது இறைவனை தியானிப்பதையும் தவறாமல் செய்தார்.

vii) நன்றியுணர்வில்
தான் பெற்ற இந்த உன்னத நிலைக்குக்
காரணமாயிருந்தவர்களை அவர் மறந்ததே இல்லை. தனக்கு
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்,
அவர்களுக்காக செபித்தார். மற்றவர்களிடமும் அவர்களைப் பற்றி
பெருமையாக பேசுவார். நன்றியுள்ளம் அவர் பண்புகளில்
மேலானதாய் விளங்கியது.
இவ்வாறு சமூகத்திற்கும், திருச்சபைக்கும் ஏற்றதொரு
நல்ல வாழ்க்கையை இறை ஊழியர் தேவசகாயம் வாழ்ந்தார்.
நாமும் நல்ல பண்புகளுடன் நல்ல பெயரை வாங்க வேண்டும்.
உனது பதில் கடிதத்திற்காக காத்திருக்கிறேன்.
உன் அன்புள்ள,
மாமா.




  

0 comments:

Dí lo que piensas...