காற்றாடிமலை கால்தடங்கள்
அனலுரை
இந்தியாவில்
வேரூன்றி வளர்ந்த பல சமயங்களுள்
கிறித்தவம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு
எண்ணிக்கையில் தான் கிறித்தவர்கள் சிறுபான்மையினர். ஆனால்
கிறித்தவ நெறி சுட்டிக்காட்டும் உயர்மதிப்பீடுகளோ
அனைத்து மனிதர்களும் வாழ்வதற்கேற்ற வாழ்வு நெறிகளாக அமைந்துள்ளன. பல
மகான்களின் உயிர்த் தியாகங்களால் இந்த
கிறித்தவ திருமறை இம்மண்ணில் வேரூன்றி
வளர்ந்தது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்ட
சமூகச் சூழலில், அரசாட்சி கோலோச்சிய காலக்கட்டத்தில், தான் பிறந்த குலம்,
மதம் யாவற்றையும் துணிச்சலோடு துறந்து தாங்க முடியா
இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு கிறித்தவ மறைக்காக தன் உயிரை கொடையாகத்
தந்தவர் இறை ஊழியர் தேவசகாயம்.
கிறித்தவ நம்பிக்கையை உயர்வாக ஏற்று, அதைத்
தன்னுடைய நம்பிக்கையாக மாற்றியதால் இறை ஊழியர் நிலைக்கு
உயர்ந்தவர் தேவசகாயம் என்னும் மாமனிதர்.
தென்னக தீபமாக குமரி
மண்ணில் பிறந்து, இம்மண்ணிலேயே மறைசாட்சி விதையாக விதைக்கப்பட்டவர்.
“இந்தியாவின் முதல் மறைசாட்சி” என்னும்
சிறப்புக்குரிய இறைஊழியர் தேவசகாயம் பற்றிய பல படைப்புக்கள்
உள்ளன.
ஆனால் கேள்வி - பதில்
வடிவில் இறை ஊழியர் தேவசகாயம்
பற்றி வெளிவரும் முதல் நூலாகவே “காற்றாடிமலைக்
கால்தடங்கள்” அமைகிறது. சிறுவர்,
பெரியோர், கிறித்தவர், கிறித்தவரல்லாதோர் என எல்லா தரப்பினரும்
எளிய முறையில் இறை ஊழியரைப் பற்றி
அறிந்து கொள்ள இந்நூல் உதவும்
என்பது உறுதி.
இந்நூலை தயாரித்த ஆசிரியர்கள்
வெனிஷ், அருளன், பெரி மூவரையும்
அனல் வெளியீடு நன்றியோடு வாழ்த்துகிறது. தமிழ்கூறு
நல்லுலகிற்கு இவர்களின் இந்த சிறப்புப் படைப்பு
நல்லெண்ணங்களை வளர்க்க உதவட்டும்.
அனல் வெளியீட்டக நண்பர்கள்
03.12.2010 திருவள்ளுவர் நூல் நிலையம்
தூய சவேரியார் நினைவு நாள். நாகர்கோவில்.
ஆசிரியர்களுரை
இறை ஊழியர் தேவசகாயத்தைப்
பற்றிய பல புத்தங்களின் வரிசையில்
இப்புத்தகமும் புதிதாய் சேர்கிறது. நதிகள்
பலவாயினும் சங்கமிக்கும் கடல் ஒன்று தானே.
வரலாற்றுப் பார்வையிலும், அரசியல் பார்வையிலும் இவரது
வாழ்க்கை வரலாற்றை பலரும் படைத்துள்ளனர்.
பாடப் புத்தகங்களுடன் பள்ளிப்
படிப்பையும், பலக் கனவுகளுடன் கல்லூரிப்
படிப்பையும் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள்
நமது மறைசாட்சியையும் பத்தோடு பதினொன்று என
பார்த்துச் செல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த
மாணவர்களின் மனங்களில் மறைசாட்சியை நிலை நிறுத்துவதே இந்தப்
புத்தகத்தின் நோக்கம்.
வாழ்க்கைச் சூழ்நிலையை
வாழ்வு முறைகளுடனும்
திருச்சபைப் பணியை
வசந்த பூக்களுடனும்
படைக்க முயற்சித்திருக்கிறோம்.
இறை ஊழியரின்
காலடித்
தடங்களை
இங்கே தடயங்களுடன்
பதித்திருக்கிறோம்.
இளமை முதல் இறப்பு
வரை
இயன்றவரை எடுத்துரைத்திருக்கிறோம்.
இந்த மாமனிதரின் சமூகப் பாங்கை
இதில் சத்தமில்லாமல் சித்திரமாக
வரைந்திருக்கிறோம்.
"இவர் தானே!' என்று
எண்ணியவர்களுக்கு
"இவரா!' என்ற இறைச்
சிந்தனையை
வெள்ளை இலையில் விளம்பியிருக்கிறோம்.
"மறைசாட்சி'
என்று
மனதில்
நிறுத்தியவர்களுக்கு
மகிழ்வை
மறுபிறவி அடையச் செய்திருக்கிறோம்.
கேள்விபதில்களாய்
இந்தப் புத்தகத்தில்
இறை ஊழியர் தேவசகாயத்தை
விதையாய் பதியம் போட்டிருக்கிறோம்.
விளைச்சல்
தரும் என்ற நம்பிக்கையில்
எங்களுக்கு
உதவிய
நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
நூல் முகப்புக்கு வடிவம்
கொடுத்த
ஓவியர் திரு. லியோ
ராய்
அவர்களுக்கு நன்றி!
தடங்களுக்கு
அடித்தளம்
அமைத்திருந்த
மூல நூல்களின் ஆசிரியர்களுக்கு
நெஞ்சார்ந்த
நன்றி!
அச்சுக் கோர்வை செய்த
முளகுமூடு கல்லூரி அச்சக
பணியாளர்களுக்கு நன்றி!
அச்சாக்கம்
செய்து தந்த
பிரிண்ட்
பாய்ன்ட் அச்சகத்தார்க்கு நன்றி!
ஊக்கம் தந்து உற்சாகமூட்டிய
நண்பர்களுக்கு நன்றி!
பொறுப்பெடுத்து
பதிப்பு செய்த
அனல் வெளியீட்டக
நண்பர்களுக்கு
நன்றி!
கனிந்த
உள்ளத்துடன்.
வெனிஷ்
நாகர்கோவில், அருளன்
03-12-2010. பெரி
தடம் 1 : பொதுவானவை
1. இறை ஊழியர் தேவசகாயத்தின்
வாழ்வில் இடம்பெற்ற முக்கிய இடங்கள், பெயர்கள்
பொருட்களைப் பற்றிய ஒரு முன்னோட்டம்.
2. இறை ஊழியர் தேவசகாயம் எந்த குறுநிலப்பரப்பில் வாழ்ந்தார்?
எண்
|
பெயர்
|
விளக்கம்
|
சுருக்கெழுத்து
|
1 |
மருதங்குளங்கரை |
இறை ஊழியர் தேவசகாயம் பிறந்து வளர்ந்த வீட்டின் பெயர் |
(மாத-86) |
2 |
நட்டாலம் |
இறை ஊழியர் தேவசகாயம் பிறந்த கிராமம் |
|
3 |
தலக்குளம் |
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனைவியின் ஊர் |
(மிக்11) |
4 |
மேக்கோடு |
பார்கவியின் (ஞானப்பூ) உறவினர் வாழ்ந்த இடம். |
(மிக்-11) |
5 |
வடக்கன்குளம்ஆலயம் |
இறை ஊழியர் தேவசகாயம் மற்றும் அவரது மனைவி திருமுழுக்குப் பெற்ற இடம். |
(மாத-86) |
6 |
குளுமக்காடு |
இறை ஊழியர் தேவசகாயம் முதலில் கொல்லப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்ட இடம் |
(மாத-88) |
7 |
பெருவிளை |
தூக்கிலிடப்படுவதற்காக இறை ஊழியர் தேவசகாயம் கொண்டு செல்லப்பட்ட இடம் |
(மாத89) |
8 |
புலியூர்க்குறிச்சி |
இறை ஊழியர் தேவசகாயம் முட்டிடிச்சி தண்ணீர் வரச் செய்த பாறை உள்ள இடம் |
(மாத-90) |
9 |
காற்றாடிமலை |
இறை ஊழியர் தேவசகாயம் சுட்டுக் கொல்லப் பட்ட இடம் |
(மாத94) |
10 |
கோட்டாறு ஆலயம் |
இறை ஊழியர் தேவசகாயம் அடக்கம் செய்யப் பட்ட இடம் |
(மாத-95) |
11 |
பத்மனாபபுரம் கோட்டை |
இறை ஊழியர் தேவசகாயம் பணி செய்த இடம் |
|
12 |
மணியடிச்சான்பாறை |
இறை ஊழியர் தேவசகாயம் சுட்டுக் கொல்லப் பட்ட பிறகு ஒலி எழுப்பிய பாறை |
(மாத94) |
13 |
மார்த்தாண்டவர்மா |
இறை ஊழியர் தேவசகாயம் பணியாற்றிய காலத்து மன்னர். |
|
14 |
ஞானப்பூ |
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனைவி |
|
15 |
டிலனாய் |
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனமாற்றத்திற்குக் காரணமானவர் |
|
16 |
பணி. புத்தாரி |
இறை ஊழியர் தேவசகாயத்துக்கு திருமுழுக்கு அளித்தவர் |
|
17 |
பணி. தாமஸ் - டி- |
இறை ஊழியர் தேவசகாயத்தை அடக்கம் செய்தவர் |
|
18 |
விலங்கு |
இறை ஊழியர் தேவசகாயத்தை கட்டி வைக்க பயன்படுத்தியது. |
|
19 |
தலைப்பாகை |
இறை ஊழியர் தேவசகாயம் அணிந்திருந்தது. |
|
20 |
ஆல மரம் |
காற்றாடிமலையில் இறை ஊழியர் தேவசகாயம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது நிழல் தந்த மரம் |
(புஷ்-94) |
21 |
வேப்ப மரம் |
பெருவிளையில் ஏழு மாதங்கள் கட்டி வைக்கப்பட்ட மரம் |
(புஷ்-94) |
22 |
பூவரசு மரம் |
ஆரல்வாய்மொழியில் கட்டி வைக்கப்பட்ட மரம் |
(புஷ்-69) |
2. இறை ஊழியர் தேவசகாயம் எந்த குறுநிலப்பரப்பில் வாழ்ந்தார்?
திருவிதாங்கூர் (நற்1)
3. இறை ஊழியர் தேவசகாயம்
வாழ்ந்த காலம் எது?
18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி (நற்1)
4. திருவிதாங்கூர் நிலப்பரப்பில் அன்று வழக்கில் இருந்த
மொழி எது?
மலையாளம் (நற்1)
5. இறை ஊழியர் தேவசகாயம்
எதற்காகக் கொல்லப்பட்டார்?
கிறித்தவ விசுவாசத்திற்காக (நற்4)
6. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர் யார்?
டிலனாய் (நற்11)
7. இன்றைய காலக்கட்டத்தில் இறை
ஊழியர் தேவசகாயத்தின் வரலாறு முக்கியத்துவம் பெறுவதன்
காரணம் என்ன?
அது பொதுநிலையினர் வரலாறு
என்பதால் (நற்11)
8. பொதுநிலையினரின் நூற்றாண்டு எது?
21ஆம் நூற்றாண்டு (நற்11)
9. மார்த்தாண்டவர்மாவும், இறை ஊழியர் தேவசகாயமும்
வாழ்ந்த காலத்தில் அரசியல் பலமிழந்த வெளிநாட்டவர்
யார்?
போர்த்துக்கீசியர்கள் (நற்12)
10. இறை ஊழியர் தேவசகாயம்
வாழ்ந்த மறைமாவட்டம் எது?
கொச்சி மறைமாவட்டம் (நற்-38)
11. இறை ஊழியர் தேவசகாயம்
வாழ்ந்த காலத்தில் கொச்சி மறைமாவட்டத்தின் ஆயர்
யார்?
இயேசு சபையைச் சார்ந்த
போர்த்துக்கீசியரான ஆயர் கிளமென்ட் ஜோசப்
கொலாசோ லெத்தாவோ. (நற்-38)
12. இறை ஊழியர் தேவசகாயம்
என்னும் பெயர் ஏற்கெனவே இருந்த
எதாவது புனிதரின் பெயரா?
இல்லை (நற்-49)
13. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் மறைசாட்சியாக உயிர்
நீத்தவர் யார்?
இறை ஊழியர் தேவசகாயம்
(புஷ்தொடக்கம்)
14. இறை ஊழியர் தேவசகாயம்
இயேசுவைப் போன்று எத்தனை காய
மகிமையோடு இறந்தார்?
5
காயங்கள் (மாத-80)
15. தூய செபஸ்தியாருக்கும், இறை
ஊழியர் தேவசகாயத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை
என்ன?
o
இருவரும்
போர்வீரர்கள் அல்லது அரசவையின் ஊழியர்கள்
இருவரும் அரசுக் கட்டளையால் கிறித்துவுக்காகக் கொல்லப்பட்டவர்கள் (நற்--101)
தடம் 2: வரலாற்றில் இறை ஊழியர் தேவசகாயத்துடன் வலம் வந்தவர்கள்
1. எந்த அரசனிடம் இறை
ஊழியர் தேவசகாயம் அரசுப் பணி ஆற்றினார்?
மன்னர் மார்த்தாண்டவர்மா (நற்-2)
2. மன்னர் மார்த்தாண்டவர்மா எந்த
ஆண்டில் பிறந்தார்?
கி.பி. 1706 (நற்-2)
3. மன்னர் மார்த்தாண்டவர்மா எப்பொழுது
ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்?
கி.பி.1728 (நற்-2)
4. மன்னர் மார்த்தாண்டவர்மா அரசாண்ட
காலம் எது?
கி.பி.1729 முதல்
1758 வரை (புஷ்-5)
5. வஞ்சி நாட்டு ஜீலியஸ்
சீசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
மன்னர் மார்த்தாண்டவர்மா
6. திருவிதாங்கூரின் நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?
மன்னர் மார்த்தாண்டவர்மா (தங்17)
7. மன்னர் மார்த்தாண்டவர்மா எப்பொழுது
காலமானார்?
கி.பி.1758 (நற்16)
8. மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்குப் பின் மன்னராக
வந்தவர் யார்?
இளவரசர் ராமவர்மா (நற்-16)
9. நேமனில் புதுக் கிறித்தவர்களுக்காக
ஆலயம் எழுப்ப பூமியைத் தானமாக
அளித்தவர் யார்?
இளவரசர் ராமவர்மா (நற்-93)
10. மன்னர் மார்த்தாண்டவர்மாவின் தளவாய் யார்?
இராமையன். (நற்-5)
11. இராமையன் தளவாயின் ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடி (நற்-5)
12. இராமையன் தளவாய் எப்படி அழைக்கப்பட்டார்?
சிறந்த இராசபக்தர், வீரசிகாமணி,
கடமை வீரர், நம்பிக்கை நட்சத்திரம்
(புஷ்36)
13. இறை ஊழியர் தேவசகாயம்
பற்றி அந்தணர்கள் கூறிய குற்றச்சாட்டுக்களை அரசர்
யாரிடம் கேட்டு உறுதிப்படுத்தினார்?
இராமையன் தளவாய் (புஷ்-40)
14. இராமையன் தளவாய் மார்த்தாண்டவர்மா மன்னரிடம்
எந்த ஆண்டுகளில் பணியாற்றினார்?
கி.பி.1736 முதல்
1756 வரை (அந்60)
15. இராமையன் தளவாய் கிறிஸ்தவர்களுக்கு எதிராக
கடுமையான ஆணைகள் பிறப்பிக்க எப்பொழுது
வட்டாட்சியாளர்களுக்கு உத்தரவிட்டார்?
கி.பி. 1749 சனவரி (அந்-77)
16. இறை ஊழியர் தேவசகாயத்தைக்
கொல்வதற்காக யாரை இராமையன் தளவாய்
ஆரல்வாய்மொழிக்கு அனுப்பினார்?
சிங்கார அண்ணாவி (மிக்108)
17. இராமையன் தளவாய் எப்பொழுது, எங்கு,
எந்த நோயால் பலியானார்?
கி.பி.1756இல்
மாவேலிக்கரையில், பெரியம்மை என்ற வைசூரி நோயால்
(அந்-37)
18. குளச்சல் போர் எப்பொழுது நடைபெற்றது?
கி.பி.1741 சூன்
மாதம் 27ஆம் நாள் (புஷ்-10)
19. குளச்சல் போரில் கைது செய்யப்பட்ட
டச்சுப் படை வீரர்கள் எங்கு
சிறை வைக்கப்பட்டனர்?
உதயகிரிக் கோட்டை (புஷ்-11)
20. குளச்சல் போரின் வெற்றியினை நினைவுகூரும்
வகையில் குளச்சல் கடற்கரையில் என்ன சின்னம் நிறுவப்பட்டுள்ளது?
திருவிதாங்கூர் அரசின் சங்குச் சக்கர
முத்திரையினைத் தாங்கிய கல்தூண் (புஷ்-13)
21. திருவிதாங்கூரில் தண்டனை பெற்றக் குற்றவாளிகள்
எங்கு சாகடிக்கப்பட்டனர்?
திருவிதாங்கூரின் பூர்வீகத் தெற்கு எல்லையாகிய தோவாளை
(நற்-121)
22. திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் மரபுப்படி
அந்தணர்களை எப்படி எண்ணினர்?
பூதேவர்கள் (புஷ்-39)
23. கி.பி.1740இல்
சந்தாசாகிபின் படையெடுப்பால் தென் திருவிதாங்கூர்
சமூகம் என்ன பயனடைந்தது?
நற்செய்தி அறிவிப்பிற்கு கதவுகள் திறந்து விடப்பட்டன. (நற்-123)
24. கோட்டைவாசல் எப்போதுக் கட்டப்பட்டது?
கி.பி.1740இல்
சந்தாசாகிப்புடனான தோல்விக்குப் பிறகு (நற்-122)
25. மார்த்தாண்டவர்மா நாட்டை எத்தனை தாலுகாக்களாகப்
பிரித்தார்?
8
தாலுகாக்கள் (அந்-94)
26. இறை ஊழியர் தேவசகாயம்
பற்றி அந்தணர்கள் அரசரிடம் கூறிய குற்றச்சாட்டுக்கள் யாவை?
i) அரசர்களுக்கும்,
அந்தணருக்கும் எதிராக
அவதூறாகப் பேசுகிறார்.
அவதூறாகப் பேசுகிறார்.
ii) புராணங்களையும்,
தேவதைகளையும்
இகழ்ச்சியாகப் பேசுகிறார்
இகழ்ச்சியாகப் பேசுகிறார்
iii) பத்மனாபசுவாமி
கோவிலை இடித்து தள்ளப்
போவதாக சத்தியம் செய்கிறார்.
போவதாக சத்தியம் செய்கிறார்.
iv) அரசரை
நாட்டை விட்டே விரட்டப்
போவதாக உறுதி கூறுகிறார்.
போவதாக உறுதி கூறுகிறார்.
v) தாங்கள்
அணிந்திருக்கும் பூணூலையும் அறுத்து
தனது அரைஞாணாக மாற்றிவிடுவதாகவும்
கூறுகிறார். (புஷ்-38,39)
தனது அரைஞாணாக மாற்றிவிடுவதாகவும்
கூறுகிறார். (புஷ்-38,39)
27. மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு மரத்தினால் கட்டில்
செய்து அதன் நான்கு பக்கமும்
சிலுவை அடையாளம் பதித்துக் கொடுத்தவர் யார்?
டிலனாய் (அந்-96)
28. டிலனாய் என்பவர் யார்?
கி.பி.1741இல்
குளச்சல் கடற்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர். டச்சுப்
போர்ப்படைத் தளபதி (நற்-8)
29. டிலனாய்க்கும் இறை ஊழியர் தேவசகாயத்திற்கும்
என்ன தொடர்பு?
இறை ஊழியர் தேவசகாயத்தின்
மனமாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் டிலனாய்
(நற்-8)
30. டிலனாய் எங்கு பிறந்தார்?
பெல்ஜியம் நாடு (நற்-8)
31. பெல்ஜியம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
வட பிரான்ஸ் நாடு (நற்-8)
32. டிலனாயின் முழுப் பெயர் என்ன?
எஸ்தாக்கியுஸ் பெனடிக்ட் டிலனாய் (நற்-8)
33. டிலனாயின் மனைவியின் பெயர் என்ன?
மார்கரித்தா டி அல்மேதா (நற்-55)
34. "மார்கரித்தா டி அல்மேதா'வை
எல்லாரும் எவ்வாறு அழைத்தனர்?
ஏழைகளின் தாய் (நற்-5)
35. டிலனாய்க்கு வேணாட்டின் தளபதியாக பதவி வழங்க மன்னரிடம்
பரிந்துரை செய்தவர் யார்?
பொன் பாண்டித் தேவர்
(புஷ்-12)
36. வேணாட்டின் தளபதியாக இருக்குமாறு கூறிய பொன் பாண்டித்
தேவருக்கு டிலனாய் கூறிய பதில்
என்ன?
""எனக்கு தளபதி என்ற
அந்தஸ்து வேண்டாம். மன்னனுடைய,
உங்களுடைய, மக்களுடைய இதய சாம்ராச்சியத்தில் இடம்
கிடைத்தால் போதும்'' (புஷ்-12)
37. குளச்சல் போரில் டிலனாய் கைது
செய்யப்பட்டு உதயகிரிக்கு கொண்டு வரப்பட்ட போது
மன்னனுக்கு ஏவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் யார்?
நீலகண்ட பிள்ளை (புஷ்-18)
(இறை ஊழியர் தேவசகாயம்)
38. பத்மனாபபுரம் கோட்டைக்கு வடக்கே டிலனாய் எந்தத்
தொழிற்சாலையை நடத்தி வந்தார்?
ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (நற்-8)
39. இந்தியக் கிறித்தவத்திற்கு இறைவனால் தரப்பட்ட அரிய பரிசு யார்?
டிலனாய் (நற்-8)
40. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
இறைவனின் திருமுகத்தைக் காட்டியவர் யார்?
டிலனாய் (நற்-8)
41. திருவிதாங்கூர் போர் வீரர்களுக்கு டிலனாய்
எந்தப் போர் முறையைக் கற்றுக்
கொடுத்தார்?
ஐரோப்பிய போர் முறை (நற்-9)
42. டிலனாயின் சொந்த வழிபாட்டிற்காக உதயகிரியில்
மன்னர் எந்த ஆலயத்தைக் கட்டிக்
கொடுத்தார்?
புனித மிக்கேல் அதிதூதர்
ஆலயம் (நற்-9)
43. டிலனாய் எது முதல்
எது வரையான எல்லா அரசுகளையும்
மன்னர் மார்த்தாண்டவர்மாவின் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்?
காயங்குளத்திலிருந்து கொச்சி வரை மற்றும்
அஞ்சுதெங்கு (புஷ்-17)
44. டிலனாய் கட்டியெழுப்பிய மண்
கோட்டையின் பெயர் என்ன?
"திருவிதாங்கூர் லைன்ஸ்' (நற்-11)
45. டிலனாய் வெற்றி கொண்ட
பகுதிகள் யாவை?
கொல்லம், காயங்குளம், கொட்டாரக்கரை பகுதியான தெக்கங்கூரும், கோட்டயம் பகுதியான வடக்கங்கூரும், புறவூரும், புளுக்காடும். (நற்-11)
46. திருவிதாங்கூர் வரலாறு டிலனாயின் வெற்றி
குறித்து அவரை எவ்வாறு அழைத்தது?
"வலிய கப்பித்தான்' (புஷ்-17)
47. "வலிய கப்பித்தான்' என்பதன்
பொருள் என்ன?
வலிய பெரிய
(மலையாளம்)
கப்பித்தான் காப்டன் (ஆங்கிலச் சொல்லின் திரிபு) (புஷ்-17)
48. டிலனாய் எங்கெல்லாம் கருங்கல்லாலான
கோட்டைகளைக் கட்டினார்?
பத்மனாபபுரம், உதயகிரி (மாத8-5)
49. எத்தனை ஆண்டுகளுக்கு டிலனாய்
திருவிதாங்கூர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்?
37
ஆண்டுகள் (நற்-9)
50. போர் புரிய வந்த
மைசூர் மன்னர்களைத் தடுத்து நிறுத்திய மண்
கோட்டையின் பெயர் என்ன?
"திருவிதாங்கூர் லைன்ஸ்' (நற்-11)
51. டிலனாய் எங்கெல்லாம் புதிய
கோட்டைகளைக் கட்டினார்?
உதயகிரி, ஆரல்வாய்மொழி, திருவனந்தபுரம் (அந்-95)
52. டிலனாய் எங்கெல்லாம் பழையக்
கோட்டைகளைப் புதுப்பித்தார்?
பத்மனாபபுரம், கொல்லம், மாவேலிக்கரை, சங்ஙனாச்சேரி (அந்-95)
53. டிலனாயின் கட்டளைப்படி கன்னியாகுமரியில் வட்டக்கோட்டை எப்போது கட்டப்பட்டது?
கி.பி. 1748 (அந்-139)
54. டிலனாயின் உருவம் எந்த மண்டபத்தின்
கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது?
குமாரக்கோவில் மண்டபம் (புஷ்-14)
55. டிலனாய் எத்தனை ஆண்டுகள்
வாழ்ந்தார்?
62
ஆண்டுகள் (நற்-9)
56. எத்தனை ஆண்டுகள் இறை
ஊழியர் தேவசகாயம் டிலனாயின் குடும்பத் தோழராக இருந்தார்?
16
ஆண்டுகள் (அந்-143)
57. டிலனாய் தன் மகன்
மற்றும் மனைவியுடன் இறை ஊழியர் தேவசகாயத்தை
இறுதியாக எங்குச் சந்தித்தார்?
ஆரல்வாய்மொழி (அந்142)
58. டிலனாய் எப்பொழுது காலமானார்?
கி.பி.1777ஆம்
ஆண்டு சூன் மாதம் முதல்
நாள். (நற்-9)
59. டிலனாயின் கல்லறை எங்குள்ளது?
உதயகிரிக் கோட்டை (நற்-9)
60. டிலனாயின் மகன் எப்பொழுது இறந்தார்?
கி.பி. 1777 (மாத-86)
61. மரிய மல்லன் மாயக்குட்டி
எந்தப் படையின் தலைவராக இருந்தார்?
திருமுத்துப் பண்டாரப் பாளையக் குதிரைப் படை
(அந்-25)
62. "கான கோகிலம்' என்று
அழைக்கப்பட்டவர் யார்?
தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி
(அந்-23)
63. தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி
எந்தப் படையின் தலைவராக இருந்தார்?
பண்டாரப் பாளையத் தரைப்படை (அந்-3)
64. டிலனாயின் துணைவியார் மார்கரீத்தா எப்பொழுது இறந்தார்?
கி.பி. 1783 (மாத-86)
65. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மூன்று நண்பர்கள் யாவர்?
-கோட்டவிளை
ஆசான் தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி
(1716-1776)
-தொம்மன்
திருமுத்து (1712-1795)
-மரிய
மல்லன் மாயக்குட்டி (1717-1793) (அந்23)
66. கிறித்துவை புகழ்ந்து பாடியதால் சிறையில் அடைக்கப்பட்ட புலவர் யார்?
கவிஞர் தொம்மன் திருமுத்து
(நற்-70)
67. தென் திருவிதாங்கூர் கிறித்தவ
சமூகம் பெற்ற முதிர்ச்சியின் அடையாளமாக
கருதப்படுபவர் யார்?
புகழ்பெற்ற புலவர் கவிஞர்
தொம்மன் திருமுத்து.
68. கவிஞர் "தொம்மன் திருமுத்து' எழுதிய
கைப்பிரதி கவிதை ஏட்டின் பெயர்
என்ன?
வேதசாட்சியின் துயரமான பாடுகள் (நற்-70)
69. ""வேதசாட்சியின் துயரமான பாடுகள்'' என்ற
கவிதைத் தொகுப்பை கவிஞர் தொம்மன் திருமுத்து
எந்த ஆண்டில் எழுதினார்?
கி.பி. 1756. (நற்-70)
70. கவிஞர் தொம்மன் திருமுத்து
இறை ஊழியர் தேவசகாயம் குறித்து
எத்தனை கவிதைகள் எழுதினார்?
190
71. கவிஞர் தொம்மன் திருமுத்துவின்
கவிதைத் தொகுப்பு எதில் எழுதப்பட்டுள்ளது?
ஓலைச் சுவடிகளில்
72. தொம்மன் திருமுத்துவின் தந்தை
பெயர் என்ன?
பரைக்கோடு ஆசான் சான்றதிரு கரைகண்ட
முத்தப்பர் (அந்-24)
73. தொம்மன் திருமுத்து எங்கு
பணியாற்றினார்?
மார்த்தாண்டவர்மாவின் அரண்மனை (அந்-24)
74. தொம்மன் திருமுத்து எழுதிய
நாடகங்கள் யாவை?
தோமையார் சரித்திரம், மூன்று அரசர்கள், எஸ்தாக்கியார்,
ஞான சௌந்தரி, இராயப்பர், சின்னப்பர் (அந்-25)
75. தொம்மன் திருமுத்து ஆற்றிய
பணி என்ன?
டிலனாயின் உதயகிரி இரும்பு ஆலைக்கு
மருங்கூர் மற்றும் நட்டாலம் மலைகளில்
இருந்து இரும்புத் தாதுக்கள் எடுத்துக் கொடுத்தல் (அந்-24)
76. இறை ஊழியர் தேவசகாயத்தைக்
கொல்லக்கூடாது என்று அரசரின் படைகள்
மூலம் குரல் கொடுத்தவர் யார்?
மரிய மல்லன் மாயக்குட்டி
(அந்-25)
77. தொம்மன் திருமுத்து எதற்காக
கைது செய்யப்பட்டார்?
உள்ளூர் தேவர்களின் பாடல்களை
எழுத மறுத்ததினால் (அந்-84)
78. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' என்பவர் யார்?
கார்மல் சபைத்துறவி, மொழியியல்
வல்லுனர், இந்தியாவிற்கான கார்மல் சபையின் அதிகாரப்பூர்வமான
தூதர். (நற்-22)
79. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எதற்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்?
கார்மல் துறவறச் சபைக்கும்,
சிறியன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எழுந்த சில
பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அனுப்பப்பட்டார். (நற்-22)
80. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எந்த நாட்டுக் கார்மல்
சபைத்துறவி?
ஆஸ்திரிய நாடு (நற்-21)
81. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எத்தனை ஆண்டுகள் இந்தியாவில்
தங்கினார்?
13
ஆண்டுகள் (நற்-21)
82. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எப்போது இந்தியா வந்தார்?
கி.பி.1776ஆம்
ஆண்டு, அதாவது இறை ஊழியர்
தேவசகாயம் இறந்து 24 ஆண்டுகளுக்குப் பின் (நற்-40)
83. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எத்தனை முறை திருவிதாங்கூர்
மன்னர் ராமவர்மாவைச் சந்தித்தார்?
மூன்று முறை (நற்-40)
84. பவுலினோவின் "ஆங்கிலம்' மற்றும் "மலபார்' மொழித் திறமையால்
கவரப்பட்ட மன்னர் அவரை எவ்வாறு
அழைத்தார்?
"குரு' அல்லது "ஆசான்'
(நற்-41)
85. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எப்போது உரோமைக்குத்
திரும்பி சென்றார்?
கி.பி. 1789 (நற்-21)
86. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' உரோமைக்கு சென்று எந்த பணியைத்
தொடர்ந்தார்?
பேராசிரியர் பணி (நற்-21)
87. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' இந்தியாவைப் பற்றி எத்தனை நூல்கள்
வெளியிட்டார்?
இரண்டு நூல்கள் (நற்-22)
88. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எழுதிய இரண்டு நூல்கள்
யாவை?
i) ""கிழக்கிந்தியக்
கிறித்தவ இந்தியா'' (1794)
இலத்தீன் மொழி
ii) ""கீழ்த்திசை
இந்தியாவில் பயணம்'' (1798) இத்தாலிய
மொழி (நற்-22)
89. "பவுலினோ தா சான்
பார்த்தலோமேயா' எழுதிய இரு நூல்களில்
இருந்தும் நாம் குறிப்பாக அறிவது
என்ன?
இறை ஊழியர் தேவசகாயத்தின்
வாழ்வு மற்றும் மரணம் பற்றியும்
அக்காலத்திய சமூகச் சூழல் பற்றியும்
அறியலாம். (நற்-22)
90. "பிள்ளை' என்ற சொல்லை
"பவுலினோ தா சான் பார்த்தலோமேயா'
எப்படி மொழிபெயர்த்தார்?
எழுத்தர் அல்லது கணக்கர். (நற்-53)
91. பத்மனாபபுரம் கோட்டையில் "பவுலினோ தா சான்
பார்த்தலோமையா' எத்தனை நாட்கள் தங்கினார்?
16
நாட்கள் (நற்-40)
92. "புத்தாரி' என்பவர் யார்?
இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
திருமுழுக்கு அளித்த அருட்பணியாளர். (நற்-24)
93. பணி. புத்தாரியின் இந்தியப்
பெயர் என்ன?
பரஞ்ஜோதி நாதர் (நற்-27)
94. பணி. புத்தாரி எப்போது,
எங்கு பிறந்தார்?
கி.பி.1707இல்
பிப்ரவரி 22ஆம் நாள்
ஓசிமோ என்னும் நகரில்
(நற்-61)
95. பணி. புத்தாரியின் முழுப்
பெயர் என்ன?
ஜியோ வான்னி பத்திஸ்தா
புத்தாரி. (நற்-43)
96. பணி. புத்தாரி எங்கு
தனது கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்தார்?
உரோமையிலுள்ள சேசுசபைக் கல்லூரியில் (அந்-51)
97. பணி. புத்தாரி எப்போது
இறையியல் கல்வியை நிறைவு செய்தார்?
கி.பி. 1738 (அந்-41)
98. பணி. புத்தாரி எழுதிய
சிற்றேட்டின் பெயர் என்ன?
"தேவசகாயம் பிள்ளையின் மனந்திரும்பலும் வீரமரணமும்' (நற்-24)
99. பணி. புத்தாரி எழுதிய
சிற்றேடு எத்தனைப் பக்கங்களைக் கொண்டுள்ளது?
17
பக்கங்கள் (நற்-24)
100. பணி. புத்தாரி எழுதிய
சிற்றேடு எப்போது வெளிவந்தது?
1908
(நற்-24)
101. பணி. புத்தாரியின் சிற்றேட்டின்
சிறப்பு என்ன?
இறை ஊழியர் தேவசகாயத்தின்
வாழ்வு, காலம், இடம், மரணம்
பற்றிய தெளிவான விபரங்களை முதன்
முதலாகத் தரும் முதன்மையான ஆவண
நூல். (நற்-25)
102. பணி. புத்தாரி எத்தனையாவது
பங்குப் பணியாளராக வடக்கன்குளத்தில் பணிபுரிந்தார்?
16-ஆவது பங்குப் பணியாளராக
(அந்-51)
103. தனது நாள்குறிப்புப் புத்தகத்தில்
தேவசகாயத்தின் தினசரி வாழ்க்கையை எழுதி
வைத்தவர் யார்?
பணி. புத்தாரி (அந்-52)
104. பணி. புத்தாரி எப்போது
வடக்கன்குளத்திலிருந்து ஆவூருக்கு மாற்றப்பட்டார்?
கி.பி. 1752 (அந்-51)
105. பணி. புத்தாரி எத்தனை
ஆண்டுகள் வாழ்ந்தார்?
50 (புஷ்-118)
106. பணி. புத்தாரி இறை
ஊழியர் தேவசகாயத்திற்கு எதற்காக கடிதம் எழுதினார்?
-வடக்கன்குளத்தில் ஒரு புதிய ஆலயம்
கட்டுவதற்கு தேவையான தேக்கு மரம்
வெட்டி முறிப்பதற்கும்,
-ஆரல்வாய்மொழியிலிருந்து காற்றாடி மரம் கொண்டு செல்வதற்கும்
அரசு அனுமதி பெற்றுத் தருமாறு
கேட்டு கடிதம் எழுதினார் (புஷ்53)
107. பணி. புத்தாரி எழுதிய
கடிதத்தை பற்றி இறை ஊழியர்
தேவசகாயம் யாரிடம்
கூறினார்?
"இராமையன் தளவாய்' என்ற மந்திரியிடம்
(புஷ்-53)
108. "நேமன் மிஷனின்' தலைமைக்
குருவாக இருந்தவர் யார்?
பணி. புத்தாரி (நற்-61)
109. "நேமன் மிஷனின்' தலைமைக்
குருவாக பணி. புத்தாரி எந்த
ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை
நியமிக்கப்பட்டிருந்தார்?
கி.பி.1744 முதல்
1751 வரை (நற்-61)
110. "நேமன் மிஷன்' மதமாற்றம்
குறித்து கடைபிடித்த கொள்கை என்ன?
"சாதியை விட்டு விடாமலே
ஒருவர் கிறித்தவனாகலாம்' என்ற "நோபிலி'யின் கொள்கையைக்
கடைபிடித்தது. (நற்-58)
111. "நேமன் மிஷன்' எப்பொழுது
தொடங்கப்பட்டது?
கி.பி. 1710இல்
(நற்-57)
112. இறை ஊழியர் தேவசகாயம்
கொல்லப்படுவதற்கு ஓராண்டிற்கு முன்னர் பணி. புத்தாரி
எங்கிருந்து எங்கு இடம் மாற்றப்பட்டார்?
நேமனிலிருந்து ஆவூருக்கு (நற்-29)
113. பணி. புத்தாரி எப்பொழுது
இறந்தார்?
கி.பி.1757ஆம்
ஆண்டு மே மாதம் 19ஆம்
நாள் வியாழக்கிழமை (புஷ்-118)
114. பணி. புத்தாரியின் கல்லறை
எங்குள்ளது?
ஆவூர் (நற்-127)
115. பணி. புத்தாரியின் கல்லறை
மேல் நாலுகால் தூண் மண்டபம் ஒன்றை
அமைத்தவர் யார்?
இறை ஊழியர் தேவசகாயத்தின்
மனைவி "ஞானப்பூ' (நற்-68)
116. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
முதல் நற்கருணை வழங்கியவர் யார்?
பணி. பீட்டர் பெரேரோஸ் (அந்-149)
117. பணி. புத்தாரிக்கு பதிலாக
வடக்கன்குளத்தில் பொறுப்பேற்றிருந்த பங்குப் பணியாளர் யார்?
பணி. பிரான்சிஸ்கு கிளமெண்ட்
தொம்மாசினி என்ற மதுரேந்திர சுவாமிகள். (அந்-141)
118. பணி. புத்தாரிக்கு பதிலாக
வடக்கன்குளத்தில் பொறுப்பேற்றிருந்த பங்குப் பணியாளர் எவ்வளவு
காலம் பொறுப்பேற்றிருந்தார்?
-1751
முதல் 1755 வரை (அந்-141)
119. பணி. புத்தாரியின் சிற்றேட்டை
என்ன பெயரில், யார் வெளியிட்டார்?
"தேவசகாயம் பிள்ளையின் மனந்திரும்பலும் வீரமரணமும்' என்ற பெயரில் திருச்சியில்
இயேசுசபைக் குரு மாணவராக இருந்த
பீட்டர் தாமன் என்பவர் வெளியிட்டார்.
(நற்-43)
120. பணி. பெரேரோஸ் இறை
ஊழியர் தேவசகாயத்திற்கு எந்த மறைசாட்சியின் வரலாற்றை
எடுத்துக்காட்டாகக் கூறினார்?
தூய செபஸ்தியார் (புஷ்-56)
121. இறை ஊழியர் தேவசகாயம்
கைது செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு ஒப்புரவு
அருட்சாதனம் வழங்கியவர் யார்?
அருட்பணி. பரேரோஸ் (நற்-101)
122. பணி. "பீட்டர் பெரேரோஸின்' சம்பளமும்,
வழிபாட்டுச் செலவுக்குமாக மன்னர் மாதம் ஒன்றுக்கு
எவ்வளவு அளித்தார்?
நூறு பணம் (இன்றைய
14 ரூபாய்) (அந்-44)
123. டிலனாயின் உதயகிரி புனித மிக்கேல்
சம்மனசானவரின் ஆலயத்தில் வழிபாட்டுக் குருவாக இருந்தவர் யார்?
அருட்பணி. ஆர். பீட்டர் பெரேரோஸ்
சே.ச. (அந்-44)
124. இறை ஊழியர் தேவசகாயம்
பஞ்சவன்காட்டின் சிறையில் இருந்தபோது அவருக்கு பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை வழங்கியவர்
யார்?
கோட்டாறு பங்குப் பணியாளர் தாமஸ்
டி. பொன்சேகா சே.சே (அந்-133)
125. இறை ஊழியர் தேவசகாயத்தின்
இறந்த உடலைக் கொண்டு வர
ஆரல்வாய்மொழி சவுக்குக் காட்டில் காவல் காத்த தலைவர்களுக்கு
ஆள் அனுப்பியது யார்?
பணி. தாமஸ்.டி.
பொன்சேகரா சே.ச. (புஷ்-76)
126. இறை ஊழியர் தேவசகாயத்தின்
உடலை வடக்கன்குளம் கொண்டு செல்ல வேண்டுமென்ற
குருவானவரின் திட்டம் ஏன் நிறைவேறவில்லை?
"கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின்
உடல்களை வேறு நாடுகளுக்குக் கொண்டு
செல்ல அரசனின் அனுமதி இல்லை'
என்பதனால் (மாத-80)
127. "பொதிமாடு' வியாபாரம் செய்யும் கிறித்தவர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தின்
எலும்புகளை எந்த பங்கு பணியாளரிடம்
ஒப்படைத்தார்கள்?
கோட்டாறு பங்குப் பணியாளர் தாமஸ்.
டி. பொன்சேகரா சே.ச. (மாத-80)
128. வடக்கன்குளம் திருக்குடும்ப தேவாலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது?
கி.பி. 1695 (மாத-86)
129. இறை ஊழியர் தேவசகாயத்தின்
கல்லறையை முதல் முறையாகத் திறந்து
பார்த்தவர்கள் யார்?
பங்குப் பணியாளர் உயர்
மறைதிரு. பெர்னார்டின் மற்றும் சில அருட்பணியாளர்கள்
(மாத-95)
130. இறை ஊழியர் தேவசகாயத்தை
அடக்கம் செய்த கோட்டாறு பங்குப்
பணியாளர் யார்?
பணி. தாமஸ். டி.
பொன்சேகரா சே.ச. (புஷ்-76)
131. இறை ஊழியர் தேவசகாயத்தின்
வீர மரணத்திற்கு "தேதெயும்' என்ற நன்றிப் பாடலை
பாடச் சொன்னவர் யார்?
கொச்சி ஆயர் கிளமென்ஸ்
ஜோசப் (நற்-131)
132. கருங்குளம் உள்ளடங்கிய அய்யம்பட்டி பகுதிகளில் இறை ஊழியர் தேவசகாயத்தின்
பெயரைப் பரப்பியவர் யார்?
"கோட்டாறு பங்குப் பணியாளர் தாமஸ்
டி பொன்சேகரா' (நற்-119)
133. இறை ஊழியர் தேவசகாயம்
கட்டப்பட்டிருந்த சங்கிலியை உரோமைக்கு எடுத்துச் சென்ற ஆயர் யார்?
ஆயர் பிரான்சீஸ் திபூர்சியுஸ்
ரோச் (மிக்-134)
134. ஆயர். பிரான்சீஸ் திபூர்சியுஸ்
ரோச் எந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்?
தூத்துக்குடி (மிக்-134)
135. இறை ஊழியர் தேவசகாயத்தின்
கை, கால் விலங்குகளைத் தவற
விட்டவர் யார்?
ஆயர். பிரான்சீஸ் திபூர்சியுஸ்
ரோச் (மிக்-134)
136. நேமன் மிஷன் பொறுப்பில்
எந்தெந்த ஊர்கள் இருந்தன?
தூத்துக்குடி முதல் அஞ்சுதெங்கு வரை
உள்ள ஊர்கள் (அந்-134)
137. மக்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க
மன்னரிடம் சென்று கேட்ட கார்மல்
துறவி யார்?
பவுலினோ (அந்-126)
138. ஆரல்வாய்மொழியில் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
பாவசங்கீர்த்தனம் வழங்கியவர் யார்?
பணி. பிரான்சிஸ்கு கிளமெண்ட்
தொம்மாசினி (அந்-143)
தடம் 3 : குடும்ப வாழ்வும் இறை அழைத்தலும்
1. இறை ஊழியர் தேவசகாயம்
பிறந்த மாவட்டம் எது?
கன்னியாகுமரி (நற்-4)
2. இறை ஊழியர் தேவசகாயம்
பிறந்த ஊர் எது?
நட்டாலம் (மாத-33)
3. நட்டாலம் எந்த தாலுகாவில் அமைந்துள்ளது?
விளவங்கோடு (புஷ்-5)
4. இறை ஊழியர் தேவசகாயம்
எப்பொழுது பிறந்தார்?
கி.பி.1712 ஏப்ரல்
23 (மாத-33) (புஷ்-6)
5. இறை ஊழியர் தேவசகாயத்தின்
தந்தை பெயர் என்ன?
வாசுதேவன் நம்பூதிரி (புஷ்-6)
6. இறை ஊழியர் தேவசகாயத்தின்
தாய் பெயர் என்ன?
தேவகி அம்மையார் (புஷ்-6)
7. இறை ஊழியர் தேவசகாயத்தின்
தங்கை பெயர் என்ன?
லெச்சுமிக்குட்டி (அந்-17)
8. திருமுழுக்கு பெறும்முன் இறை ஊழியர் தேவசகாயம்
எவ்வாறு அழைக்கப்பட்டார்?
நீலகண்டபிள்ளை (மாத-33)
9. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்
யார்?
பரைக்கோடு ஆசான் கரைகண்ட முத்தப்பர்
(அந்-20)
10. இறை ஊழியர் தேவசகாயம்
எந்தெந்த மொழிகளிùல்லாம் புலமைப்
பெற்றிருந்தார்?
வடமொழி, மலையாளம், தமிழ்
(மாத-33)
11. இறை ஊழியர் தேவசகாயம்
எவற்றிலெல்லாம் தன் திறமையை வெளிபடுத்தினார்?
- தத்துவம், இறையியல், இலக்கணம்
- புராணம் படித்து மனப்பாடமாக ஒப்புவித்தல்
- சண்டைப் பயிற்சி (மாத-33)
12. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
திருமுழுக்குக் கொடுத்தவர் யார்?
பணி. ஜான் பப்திஸ்த்
புத்தாரி. (நற்-43)
13. இறை ஊழியர் தேவசகாயம்
எப்பொழுது எங்கு திருமுழுக்குப் பெற்றார்?
கி.பி. 1745-இல்
வடக்கன்குளம் ஆலயத்தில் (நற்-36)
14. இறை ஊழியர் தேவசகாயத்தின்
திருமுழுக்குப் பெயர் என்ன?
லாசர் (நற்-46)
15. "லாசர்' என்ற பெயர்
மாற்றம் பெறக் காரணம் என்ன?
திருமுழுக்கின் போது கிறித்தவ பெயர்
சூட்டும் பாரம்பரியம்
16. "லாசர்' என்பதின் பொருள்
என்ன?
"இறைவனின் உதவி' (நற்-46)
17. "லாசர்' தேவசகாயமாக மாற்றம்
பெற காரணம் என்ன?
"லாசர்' என்பதன் பொருள்
"இறைவனின் உதவி'
"இறைவனின் உதவி' என்பதன் பெயர்ச்சொல்
தேவசகாயம். (நற்-46)
18. எதற்காக பணி. புத்தாரி,
இறை ஊழியர் தேவசகாயத்திற்கு திருமுழுக்கு
கொடுப்பதற்கு அஞ்சினார்?
""திருவிதாங்கூர் அரசரின் அச்சுறுத்தலால்'' (நற்-61)
19. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்கு பெறும் போது அவரது
வயது என்ன?
33
(நற்-76)
20. நட்டாலத்திற்கும், பத்மனாபபுரத்திற்கும் இடையே உள்ள தூரம்
என்ன?
7
கிலோ மீட்டர் (நற்-76)
21. இறை ஊழியர் தேவசகாயத்தின்
ஆசிரியர் சான்றதிரு கரைகண்ட முத்தப்பர் பிறந்த
ஆண்டு எது?
கி.பி. 1669 (அந்-17)
22. இறை ஊழியர் தேவசகாயத்தின்
ஆசிரியர் சான்றதிரு கரைகண்ட முத்தப்பர் இறந்த
ஆண்டு யாது?
கி.பி. 1771 (அந்-22)
23. இறை ஊழியர் தேவசகாயம்
பணியாற்றிய அரச மாளிகை எது?
பத்மனாபபுரம் (நற்-8)
24. பத்மனாபபுரம் அரச மாளிகையில் இறை
ஊழியர் தேவசகாயம் ஆற்றிய பணி என்ன?
அரசு அலுவலர் (நற்-8)
25. எந்தக் காலம் வரை
பத்மனாபபுரம் "கல்குளம்' என்று அழைக்கப்பட்டது?
கி.பி. 1744 வரை
(நற்-8)
26. கல்குளத்தை பத்மனாபபுரம் என்று ஏன் பெயர்
மாற்றினர்?
பத்மனாபர் என்ற அரசகுல தெய்வத்தின்
பெயரில் அழைப்பதற்காக (நற்-8)
27. "அரச நகரம்' என்று
அழைக்கப்பட்ட நகரம் எது?
கல்குளம் என்ற பத்மனாபபுரம் (நற்-8)
28. அரச மாளிகை வளாகத்தின்
தென்கிழக்கு முனையில் இருந்த இராணுவத் தளத்தின்
பெயர் என்ன?
உதயகிரிக் கோட்டை (நற்-8)
29. அரச மாளிகையில் இறை
ஊழியர் தேவசகாயம் ஆற்றிய பணிகள் யாவை?
ண்) கோவில் காரியங்களைக் கவனித்தல்
ண்ண்) படைப்பிரிவு
அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குதல்
ண்ண்ண்) பத்மனாபபுரம்
கோட்டை கட்டும் பணிக்கு பொருள்
சேர்த்தல்
ண்ஸ்) வேலையாட்களுக்குக்
கூலி கொடுத்தல்
ஸ்) அரண்மனை
சம்பந்தமான மேல் கவனிப்பு (மாத-34)
30. அரசவை பணியாளர் என்ற
முறையில் இறை ஊழியர் தேவசகாயம்
எதை எடுத்து செல்வார்?
நீண்டவாளும், கத்தியும் (நற்-36)
31. பத்மனாபபுரம் கோட்டை கட்டும் பணி
எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
கி.பி. 1745 (மாத-34)
32. இறை ஊழியர் தேவசகாயத்திற்கும்
டிலனாயிக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது?
இறை
ஊழியர் தேவசகாயம் ஒரு முக்கிய அதிகாரி
என்பதாலும், கோவிலையும் அரண்மனையையும் மேற்பார்வை செய்யும் பணியை கவனித்து வந்ததாலும்,
அதிகநாட்கள் பத்மனாபபுரத்தில் தங்கி இருந்தார்.
மேலும்,
வேலைக்கு ஆட்களையும், பொருட்களையும் அனுப்பிவைத்தல் தேவையான பணம் ஈட்டுதல்
போன்ற வேலைகளைக் கோட்டையிலிருந்து கவனித்து வந்ததால் டிலனாயோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
(மாத-35)
33. இறை ஊழியர் தேவசகாயம்
மன்னரிடம் பணியில் சேர்ந்தபோது அவரது
வயது என்ன?
28
(ஆண்டு -1740) (அந்-15)
34. இறை ஊழியர் தேவசகாயத்தை
அரண்மனைக் காரியக்காரர் வேலையில் அமர்த்திய அதிகாரி யார்?
மள்ளியாடி மல்லன் சங்கரன் (அந்-94)
35. இறை ஊழியர் தேவசகாயம்
கைது செய்யப்படும் வரை எத்தனை ஆண்டுகள்
மன்னருக்கு வேலை செய்தார்?
13
ஆண்டுகள் (அந்--139)
36. இறை ஊழியர் தேவசகாயம்
அரசுப் பணிக்காக அணிந்திருந்த அங்கியின் பெயர் என்ன?
உருமல் (அந்--154)
37. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மனைவியின் இயற்பெயர் என்ன?
பார்கவி (புஷ்-8)
38. பார்கவி எங்கு பிறந்தார்?
தலக்குளம் (புஷ்-8)
39. பார்கவி (ஞானப்பூ) மதம் மாறியபின் அவர்களுடைய
உறவினர் தலக்குளத்திலிருந்து எந்த ஊருக்கு சென்றனர்?
மேக்கோடு (மிக்-11)
40. பார்கவி அம்மையாரின் திருமுழுக்குப்
பெயர் என்ன?
ஞானப்பூ (திரேசா) (மாத-47)
41. ஞானப்பூ யாரிடமிருந்து திருமுழுக்குப்
பெற்றார்?
பணி. புத்தாரி (மாத-47)
42. ஞானப்பூவின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர் யார்?
கணவர் தேவசகாயம் (அந்-56)
43. ஞானப்பூவின் ஞானப் பெற்றோர் யார்?
வேதியர் ஞானப்பிறகாசம் மற்றும்
அவரது மனைவி திரேசம்மா (நற்-127)
44. ஞானப்பூ எந்த ஆலயத்தில்
திருமுழுக்குப் பெற்றார்?
வடக்கன்குளம் ஆலயத்தில் (தே--59)
45. "ஞானப்பூ'வின் காட்சியில்
பொல்லாத பேய் எங்கே தோன்றியது?
திருவனந்தபுரம் பாளையம் திடலில் பூவரசு
மரத்தடியில் (அந்-116)
46. இறை ஊழியர் தேவசகாயத்தின்
குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணமாக எதைக் கருதினர்?
இறை ஊழியர் தேவசகாயத்தின்
கிறித்தவ மனமாற்றம் (புஷ்-30)
47. இறை ஊழியர் தேவசகாயம்
குடும்பத்தில் நிகழ்ந்த பிரச்சனைகளுக்காக பிராயசித்தம் செய்ய யாருக்கு விழா
எடுத்தனர்?
பத்திரகாளி (புஷ்--30)
48. பத்திரகாளி பூசையின் போது இறை ஊழியர்
தேவசகாயத்திற்கும், அந்தணர்களுக்கும் இடையே என்ன விவாதம்
நடந்தது?
பூணூல் தொடர்பான விவாதம்
(புஷ்--34)
49. மருதங்குளங்கரைக் குடும்பத்தின் குடும்ப தேவதை யார்?
பத்திரகாளி (மாத---87)
50. மனமாற்றத்திற்கு முன் இறை ஊழியர்
தேவசகாயம் தன் குல தெய்வத்தை
வழிபட்ட இடம் எங்குள்ளது?
நட்டாலம் (நற்--36)
51. இறை ஊழியர் தேவசகாயத்தின்
குடும்பத்தார் அவரை எவ்வாறெல்லாம் அழைத்தனர்?
அன்பு நாயகன், தர்மதயாளன்,
நல்லத்தலைவன் (அந்--37)
52. "ஞானப்பூ' வடக்கன்குளத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
4
ஆண்டுகள் (நற்-127)
53. "ஞானப்பூ' வடக்கன்குளத்தில் யாருடன் வாழ்ந்தார்?
தன் ஞானத்தாயும், வேதியர்
ஞானப்பிறகாசம் என்பவரின் மனைவியுமான திரேசம்மாவுடன் வாழ்ந்தார். (நற்-127)
54. திருமுழுக்குப் பெற்றபின் இறை ஊழியர் தேவசகாயம்
மற்றும் அவரது மனைவி செய்த
பணிகள் யாவை?
அவர்களுக்கு கிடைத்த ஞானஒளியை பிறருக்கு
அறிவித்தனர். -பலரையும்
மனமாறச் செய்து கிறித்தவ மதத்தில்
சேர்த்தனர் (மாத-47)
55. எத்தனை மாதங்களுக்குப் பின்பு
இறை ஊழியர் தேவசகாயத்தை ஞானப்பூ
திருவனந்தபுரம் மண்டபத்தின் வாசலில் சந்தித்தார்?
19
மாதங்கள் (அந்-115)
56. "ஞானப்பூ' இறை ஊழியர் தேவசகாயத்தை
இறுதியாக எங்கு சந்தித்தார்?
ஆரல்வாய்மொழி (மாத-75)
57. தன் மரணத்திற்குப் பிறகு
எங்கு வாழ இறை ஊழியர்
தேவசகாயம் தன் மனைவியிடம் கூறினார்?
வடக்கன்குளம் (மாத-76)
58. "ஞானப்பூ' எங்கு இறந்தார்?
வடக்கன்குளம் (நற்-126)
59. "ஞானப்பூ'வின் கல்லறை
எங்குள்ளது?
வடக்கன்குளம் (நற்-67)
60. இறை ஊழியர் தேவசகாயம்
டிலனாயிடம் தன் குடும்பத்தில் என்னென்ன
துன்பங்கள் நிகழ்ந்ததாகக் கூறினார்?
-ஆடுமாடுகளுக்கும்,
பயிர்பொருட்களுக்கும், பணத்துக்கும் திடீரென நஷ்டங்கள் வந்ததாகவும்
--குடும்பத்தில்
பலருக்கும் நோய் ஏற்பட்டு படுக்கையாயினர்
எனவும்.
-"தேவி கோபம்'
குடும்பத்தைப் பிடித்துள்ளது எனவும் கூறினார் (மாத--35)
61. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
டிலனாய் எந்த விவிலிய மாந்தரின்
கதையைச் சொல்லிக் கொடுத்தார்?
நீதிமான் யோபு (மாத--37)
62. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மனமாற்றத்திற்குக் காரணம் என்ன?
டிலனாயின் அறிவுரைகள் (மாத--41)
63 இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்கு பெறுவதற்கு முன்பு யாரிடம் மறைக்கல்வியும்,
செபங்களும் கற்றார்?
வடக்கன்குளம் பங்கு உபதேசியாக இருந்த
ஞானப்பிரகாசம் (மாத--42)
64. உச்சக்கட்ட இழப்பாக இறை ஊழியர்
தேவசகாயம் டிலனாயிடம் எதைக் கூறினார்?
"உயர்தரமான மாடுகள் திடீரென இறந்துவிட்டதை'
(புஷ்--19)
65. கிறித்தவ விசுவாசத்தை இறை ஊழியர் தேவசகாயம்
தழுவ காரணம் என்ன?
கிறித்தவ விசுவாசம் பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்ததால் (புஷ்-20)
66. இறை ஊழியர் தேவசகாயத்தை
டிலனாய் எந்த விவிலிய வார்த்தைக்கு
ஒப்பிட்டார்?
"நல்ல நிலத்தில் விழுந்த
விதை' (மத் 13: 8, 23) - (புஷ்-23)
67. இறை ஊழியர் தேவசகாயத்தின்
ஞானத்தந்தை ஞானபிரகாசத்தின் இயற்பெயர் என்ன?
சிதம்பரபிள்ளை (அந்-55)
68. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்கு பெறும்போது பங்குப் பணியாளர் குறிப்பிட்ட
விவிலிய நிகழ்ச்சி யாது?
விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் ஈசாக்கைப்
பலி செலுத்தும் நிகழ்வு (அந்-55)
தடம் 4 :இறை நம்பிக்கையும் இறை பணிகளும்
1. இறை ஊழியர் தேவசகாயம்
எந்தெந்த வழிபாடுகளில் பங்கெடுப்பதை பெரும்பேறாகக் கருதினார்?
-வடக்கன்குளத்தில் பணி. புத்தாரி, -கோட்டாறில்
பணி. தாமஸ் டி. பொன்சேகா
சே.ச., -பத்மனாபுரத்தில்
பணி. பரேரோஸ் என்பவர்கள் நடத்திய
நற்கருணை வழிபாடுகளில் பங்கெடுத்தல் (நற்-64)
2. பெருவிளையில் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
யாரால் "நற்கருணை'
எத்தனை முறை வழங்கப்பட்டது?
பத்மனாபபுரம் பங்குப் பணியாளர் பரேரோஸ்
என்பவரால் இருமுறை நற்கருணை வழங்கப்பட்டது
(நற்-115).
3. பெருவிளையில் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
"ஒப்புரவு' அருட்சாதனம் வழங்கியவர் யார்?
கோட்டாறு பங்குப் பணியாளர் தாமஸ்
டி. பொன்சேகா சே.ச. (நற்-115)
4. இறை ஊழியர் தேவசகாயம்
சிறைவாழ்வின் போது எந்தக் காட்சியைக்
கண்டார்?
திருக்குடும்பக் காட்சி (நற்-127)
5. இறை ஊழியர் தேவசகாயம்
திருக்குடும்ப காட்சி கண்ட இடம்
யாது?
பெருவிளை (அந்-131)
6. இறை ஊழியர் தேவசகாயம்
சிறையில் கொடுமைபடுத்தப்பட்ட போது காவலர்கள் தப்பிக்கக்
கொடுத்த வாய்ப்பை ஏன் விரும்பவில்லை?
-தான்
தப்பித்தால் கிறித்தவர்களின் துயரங்கள் அதிகமாகும் என்பதாலும்,
-இறை
ஊழியர் தேவசகாயம் கிறித்தவத்தை விட்டு விட்டார் என்ற
வதந்தியை அவரது எதிரிகள் பரப்பத்
தொடங்குவர் என்பதாலும் அந்த வாய்ப்பை விரும்பவில்லை
(நற்-117)
7. இறை ஊழியர் தேவசகாயத்தின்
போதனையால் எந்தெந்த இடங்களில் உள்ள மக்கள் கிறித்தவ
மதத்தைத் தழுவினார்கள்?
வடக்கன்குளம், ராஜாவூர், ராமபுரம், இராமனாதிச்சன்புதூர், ஆசாரிப்பள்ளம், நெய்யாற்றின்கரை (அந்--64)
8. இறை ஊழியர் தேவசகாயம்
கைதாகும் போது யாரிடம் செபிக்க
தன் மனைவியிடம் வேண்டினார்?
அன்னை மரியாள் (அந்--76)
9. இறை ஊழியர் தேவசகாயம்
கைதானபோது அவருக்காக "திருமணி ஆராதனை' செய்தவர்
யார்? எங்கு செபித்தார்?
-டிலனாய்
மற்றும் அவரது குடும்பத்தார்.
-உதயகிரி
தூய மிக்கேல் சம்மனசானவர் ஆலயத்தில் (அந்-77)
10. பிசாசை ஓட்டும் பணியை
செய்ய இறை ஊழியர் தேவசகாயம்
எழுதிய செபத்துக்கான ஆதாரம் யாது?
சத்துரு சங்காரமாலை என்ற
சுவடி (அந்-109)
11. எந்தெந்த வேதசாட்சிகளின் விசுவாச வாழ்வை இறை
ஊழியர் தேவசகாயம் தியானித்தார்?
தூய தோமையார், தூய
அருளானந்தர், தூய செபஸ்தியார் (அந்-120)
12. இறை ஊழியர் தேவசகாயத்தை
சிறையில் சந்திக்க வந்த மக்கள் அவருக்கு
என்ன கொடுத்தனர்?
வாழைப்பழங்கள், அரிசி, தினையரிசி, சாமையரிசி,
இவற்றால் செய்த மாவு வகைகள்,
உணவுகள், துணிகள், நாணயங்கள் (அந்-123)
13. இறை ஊழியர் தேவசகாயம்
படித்து தியானித்த புத்தகங்கள் யாவை?
கிறித்துநாதரின் அனுசாரம், ஆண்டவர் அம்மானை (அந்-131)
14. "இந்த அருமையான விலங்குகள்
கூடிய சீக்கிரம் விண்ணகத்தின் மகிமைக்குரிய இரத்தினக் கம்பளமாக மாறும்' என்று இறை
ஊழியர் தேவசகாயத்திடம் கூறியவர் யார்?
சிரேஷ்ட சுவாமிகள் (அந்-135)
15. இறை ஊழியர் தேவசகாயம்
எப்பொழுதெல்லாம் ஒருசந்தி அனுசரித்து வந்தார்?
-வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் மகிமைக்காகவும்
-சனிக்கிழமைகளில் திவ்விய மாதாவின் துணைக்காகவும்
(அந்-140)
16. இறை ஊழியர் தேவசகாயம்
கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது அவருடைய நினைவில்
எழுந்த இறைவார்த்தை எது?
"உம் அடியார்களின் பிணங்களை
வானத்துப் பறவைகளுக்கு இரையாக்கினார்கள். உம்
புனிதர்களின் உடல்களை விலங்குகளுக்கு இரையாகத்
தந்தார்கள்' (அந்-147)
17. இறை ஊழியர் தேவசகாயத்தை
துப்பாக்கியால் சுடும் போது எப்படி
செபித்தார்?
"இயேசுவே! என்னை இரட்சியும்!
உலக மாதாவே! என்
மரியன்னையே! எனக்குத் துணையாக வாரும்' (அந்-151)
18. இறை ஊழியர் தேவசகாயம்
செபித்த திருப்பாடல் ஒன்றைக் கூறு?
""நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள்
இணைகின்றனர்; மாசற்றோர்க்குக் கொலைத் தீர்ப்பு அளிக்கின்றனர்''
(திருப்பாடல் 94: 21) (அந்-89)
19. இறை ஊழியர் தேவசகாயம்
நெடுமங்காடு அதிகாரியிடம் எந்த இறை வார்த்தைகளை
மேற்கோள் காட்டினார்?
மத்தேயு 4: 1-11, (இயேசு
சோதிக்கப்படுதல்) (அந்-111)
20. திருவிதாங்கூர் அரச தூதுவர்களுக்கு இறை
ஊழியர் தேவசகாயம் நினைவுபடுத்திய இறைவார்த்தை எது?
தொடக்கநூல் 11: 1-9 (பாவேல் கோபுரம்) (அந்-124,
125 )
21. இறை ஊழியர் தேவசகாயம்
முட்டிடிச்சான் பாறையில் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க
செபித்த இறைவார்த்தை என்ன?
விடுதலைப்பயண நூல் 17: 6 (பாறையிலிருந்து தண்ணீர்) (அந்-128)
22. இறை ஊழியர் தேவசகாயம்
அரசனிடம் விவாதம் செய்தபோது கூறிய
இறைவார்த்தை எது?
திருப்பாடல் 73: 3 (கடவுளின்
நீதிமுறை) (அந்-80)
23. இறை ஊழியர் தேவசகாயத்தை
மக்கள் எவ்வாறெல்லாம் புகழ்ந்தனர்?
சித்தர், ஞானி, மகான், தெய்வ
அருள் பெற்றவர் (அந்-140)
24. இறை ஊழியர் தேவசகாயம்
தான் கண்ட திருக்குடும்பக் காட்சியைப்
பற்றி யாரிடம் விளக்கம் கேட்டார்?
வடக்கன்குளம் பங்குப் பணியாளர் மதுரேந்திரர்
(மிக்-122)
25. தப்பிச்செல்ல சொன்னபோது இறை ஊழியர் தேவசகாயம்
யாரிடம் அதை தெரியப்படுத்தி அறிவுரையைப்
பெற்றார்?
வடக்கன்குளம் பங்குப் பணியாளர் மதுரேந்திரர் (மிக்-122)
26. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்குப் பெற்ற பின்பு எத்தனை
ஆண்டுகள் மக்களிடம் போதித்தார்?
4
ஆண்டுகள் (புஷ்-82)
27. இறை ஊழியர் தேவசகாயம்
யார் யார் துணைகொண்டு சிலுவைப்பாடுகளை
தியானித்து வந்தார்?
டிலனாய் மற்றும் கோட்டாறு
பங்குப் பணியாளர் தாமஸ் டி. பொன்சேகா
சே.ச. (அந்-131)
28. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்கு பெற எத்தனை நாட்கள்
தன்னை தயாரித்தார்?
-40
நாட்கள் (அந்-53)
29. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்கிற்காக எந்த ஊரில் தங்கியிருந்து
தன்னை தயாரித்தார்?
-வடக்கன்குளத்தை அடுத்த பட்டாரம் (அந்-53)
30. இறை ஊழியர் தேவசகாயம்
தனது முதல் நற்கருணையை எங்கு
பெற்றார்?
பத்மனாபபுரம் கோட்டைக்கு அருகில் இருந்த புனித
பரலோக மாதா ஆலயத்தில் (அந்-73)
31. இறை ஊழியர் தேவசகாயத்தின்
நான்கு ஆண்டுகால சேவையால் திருமறையில் சேர்ந்த சில ஊர்களைக்
கூறுக?
வடக்கன்குளம், ராஜாவூர், ராமபுரம், ராமனாதிச்சன்புதூர், ஆசாரிபள்ளம், நெய்யாற்றின்கரை (அந்-64)
32. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
தேவதூதர் எங்கு காட்சியளித்தார்?
திருவனந்தபுரம் பாளையம் திடலில், பூவரசு
மரத்தடியில் (அந்--118)
33. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
இயேசு கற்றுத் தந்த செபத்தை
முதலில் எழுதிக் கொடுத்தவர் யார்?
டிலனாய் (தங்--28)
34. இறை ஊழியர் தேவசகாயம்
யாருடைய வார்த்தைகளை அடிக்கடி சொல்லி வந்தார்?
தூய அகுஸ்தினார் (ஸ்டீ--30)
35. தூய அகுஸ்தினாரின் வார்த்தைகள்
யாவை?
"காலந்தாமதித்து உம்மை அறிய வந்தேன்,
காலந்தாமதித்து உம்மை அன்பு செய்கிறேன்'
(ஸ்டீ-30)
36. இறை ஊழியர் தேவசகாயம்
இறுதியாக யாருக்காக செபித்தார்?
ஆசிரியர் சான்றதிரு கரைகண்ட முத்தப்பரையும், அவரது
தம்பி தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி,
நண்பர்களான தொம்மன் திருமுத்து, மரிய
மல்லன் மாயக்குட்டி, அனந்த பப்புநாடார், மார்த்தாண்டவர்மா
அரசர், முதன்மந்திரி இராமையன் தளவாய் மற்றும் டிலனாய்,
திருமுழுக்கு கொடுத்த பணி. புத்தாரி
அடிகள், முதற் நற்கருணை தந்து
புனித செபஸ்தியாரை வழிகாட்டியாக தந்த பணி. பீட்டர்
பரேரோஸ், ஞானப் பெற்றோர் ஞானப்பிரகாசம்,
திரேசம்மா, அவரது தாயார், உற்றார்,
உறவினர், பெற்றோர், உபகாரிகள், திருமறைத் தழுவியவர்கள், அதற்காக நாடு கடத்தப்பட்டவர்கள்,
இறையடி சேர்ந்தவர்கள், சித்திரவதை கண்டவர்கள்,
தனக்கும்,
தனது துணைவிக்கும் உதவி செய்தவர்கள், நாட்டுமக்கள்,
குருக்கள் போன்ற அனைவருக்காகவும் செபித்தார்.
(அந்-149)
தடம் 5 : குற்றங்களும் பாடுகளும்
1. இறை ஊழியர் தேவசகாயம்
எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மதம் மாறியதற்காக
கைது செய்யப்பட்டார்?
4
ஆண்டுகளுக்குப் பின் (நற்-47)
2. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது தான் கிறிஸ்துவுக்காக துன்பப்பட
தயார் என தன் சம்மதத்தை
அறிவித்தார்?
1749
ஜனவரி
3. "குளுமக்காடு' என்னும் இடத்திற்கு இறை
ஊழியர் தேவசகாயம் எதற்காகக் கொண்டுச் செல்லப்பட்டார்?
தலை வெட்டிக் கொலை
செய்யப்படுவதற்காக (நற்-109)
4. "குளுமக்காடு' எங்குள்ளது?
புலியூர்க்குறிச்சியிலிருந்து வள்ளியாற்றைக் கடந்து அப்பட்டுவிளைக்கு அருகில் (நற்-109)
5. குளுமக்காட்டிற்கு கொலை செய்யப்படுவதற்காக கொண்டு
செல்லப்பட்ட இறை ஊழியர் தேவசகாயம் தான்
இறக்கும் வரை யாரை அருகில்
நிற்கும்படிக் கேட்டுக் கொண்டார்?
வேதியர் ஒருவரை (நற்-110)
6. எருமையின் மேலே
ஏற்றப்பட்டு ஊர்வலம் கொண்டுவரப்பட்ட இறை
ஊழியர் தேவசகாயம் எவ்வாறு காணப்பட்டார்?
புன்முறுவலுடன் (நற்-112)
7. எருமை ஊர்வலத்தின் போது
இறை ஊழியர் தேவசகாயம் செய்த
செபம் யாது??
"இறைவா எனக்கு துணை
புரியும்' (நற்-112)
8. பெருவிளையில் இறை ஊழியர் தேவசகாயம்
எத்தனை மாதங்கள் இருந்தார்?
7
மாதங்கள் (நற்-116)
9. "கோட்டைவாசல்' சிறைக்கு இறை ஊழியர் தேவசகாயம்
மாற்றப்பட்ட ஆண்டு யாது?
கி.பி.1751 (நற்-122)
10. இறை ஊழியர் தேவசகாயம்
தனக்கு வரும் மரணத்தை முன்னரே
அறிந்திருந்தது எப்படி?
ஒரு காட்சி வழியாக
(நற்-125)
11. அரசரின் குடும்ப நண்பர்
ஒருவர் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு
அரசரை எவ்வாறு எச்சரித்தார்?
அரசர் மார்த்தாண்டவர்மாவின் இல்லத்திற்கு சென்று,
""இறை ஊழியர் தேவசகாயத்தின் மாசற்ற
இரத்தத்தை சிந்துவது அரச இரக்கத்திற்கும் மற்றும்
நீதிக்கும் களங்கம் கொண்டுவரும்'' என
எச்சரித்தார் (நற்-125)
12. இறை ஊழியர் தேவசகாயத்தை
விடுவிக்குமாறும், கிறித்தவர்கள் தங்கள் மத வாழ்வை
சுதந்திரமாக வாழவும் ஆணை பிறப்பித்தவர்
யார்?
இளவரசர் இராமவர்மா (நற்-108)
13. இளவரசர் இராமவர்மாவின் ஆணையை
நிராகரித்தவர் யார்?
மன்னர் மார்த்தாண்டவர்மா (நற்-108)
14. இறை ஊழியர் தேவசகாயம்
இறப்பதற்கு எத்தனை நாட்களுக்கு முன்
தன் மனைவி ஞானப்பூவிற்கு செய்தி
அனுப்பினார்?
8
நாட்களுக்கு முன் (நற்-125)
15. இறை ஊழியர் தேவசகாயம்
தன் மனைவி ஞானப்பூவிற்கு அனுப்பிய
செய்தி என்ன?
""-தன் வாழ்வு முடியப்
போகிறது'' எனவும்,
""--தான் இறந்த பிறகு
கிறித்தவ விசுவாசத்தை விட்டுவிடாமல் வேறொரு நாடு செல்ல
வேண்டும்'' எனவும் கேட்டுக் கொண்டார்
(நற்-125).
16. இறை ஊழியர் தேவசகாயம்
இறந்த பின்பு அவரது மனைவி
ஞானப்பூ கிறித்தவ விசுவாசத்தை விட்டுவிட்டாரா?
ஆம் (நற்-126)
17. ஞானப்பூ ஏன் சிறிது
காலம் கிறித்தவத்தை விட்டுவிட்டார்?
துன்பங்களைத் தாங்க முடியாமல் (நற்-126)
18. கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிட்ட ஞானப்பூ திரும்பவும் மனம்
திரும்பினாரா?
ஆம், மனம் வருந்தி
திருந்தினார் (நற்-126)
19. ஆரல்வாய்மொழி கோட்டைவாயில் சிறையில் இறை ஊழியர் தேவசகாயம்
எப்படி காணப்பட்டார்?
காய்ச்சலோடு படுத்தப் படுக்கையில் இருந்தார். (நற்-127)
20. இறை ஊழியர் தேவசகாயத்தைச்
சுட்டுக் கொல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
ஆரல்வாய்மொழி காற்றாடிமலை (நற்-128)
21. காற்றாடிமலை எங்குள்ளது?
ஆரல்வாய்மொழி சுங்கச்சாவடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்
காட்டிற்குள் (அந்-148) (நற்-128)
22. கொல்வதற்காக வேறு ஒரு இடத்திற்கு
வரும்படி இறை ஊழியர் தேவசகாயத்தை
காவலர்கள் அழைத்தபோது அவர் என்னக் கூறினார்?
"நீங்கள் மறைக்க வேண்டாம். எங்கே
என்னை இட்டுச் செல்கிறீர்கள் என்பதை
நான் அறிவேன். சேர்ந்து
போவோம், வாருங்கள்!' என்று கூறினார் (நற்-128)
23. சுட்டுக் கொல்வதற்காக காவலர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தை
எப்போது அழைத்தார்கள்?
1752
சனவரி 14-ஆம் நாள் (நற்-128)
24. சுட்டுக் கொல்வதற்காக காவலர்கள் அழைத்தபோது இறை ஊழியர் தேவசகாயம்
எப்படிக் காணப்பட்டார்?
மனக் கலக்கத்திலும், செப
உணர்விலும் (நற்-128)
25. காவலர்கள் எவ்வாறு இறை ஊழியர்
தேவசகாயத்தை காற்றாடி மலைக்குக் கொண்டு சென்றனர்?
கிராதத்தடியில் தலைகீழாகத் தொங்கும் நிலையில் அவரைத் தூக்கிச் சென்றனர்
(நற்-129)
26. காற்றாடிமலையை அடைந்ததும் இறை ஊழியர் தேவசகாயம்
எதற்காக அனுமதி கேட்டார்?
செபிப்பதற்காக (நற்-129)
27. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மரணச் செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்தியவர்கள் யார்?
இறை ஊழியர் தேவசகாயத்தை
நேசித்த போர் வீரர்கள் (நற்--131) (மாத-80)
28. அரசரின் உள்நோக்கத்தை அறிந்த
இறை ஊழியர் தேவசகாயம் காவலரை
யாரிடம் அனுப்பினார்?
டிலனாய் (புஷ்-55)
29. அரசர் இறை ஊழியர்
தேவசகாயத்தை அழைத்து வருமாறு கூறிய
செய்தியைக் கேட்ட டிலனாய் இறை
ஊழியர் தேவசகாயத்தை எங்கு அழைத்து சென்றார்?
பத்மனாபபுரம் அருகில் தங்கியிருந்த பணி.
பரேரோஸ் அவர்களிடம் (புஷ்-55)
30. இறை ஊழியர் தேவசகாயத்தின்
எருமை ஊர்வலத்தின் போது அரசனிடமிருந்து வந்த
புதுக்கட்டளை என்ன?
"திருவிதாங்கோடு என்னும் இடத்தில் சிறைக்
கைதியாக வைத்திருக்க வேண்டும்' (புஷ்-51)
31. இறை ஊழியர் தேவசகாயம்
சிறையில் வாழ்ந்த காலத்தில் அரசனின்
ஆணை என்ன?
-தினமும்
பிராமணர்கள் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
விபூதி கொடுக்க வேண்டும்.
-கிறித்தவ
மதத்தை விட்டு விட அறிவுரைகள்
கூற வேண்டும். (மாத-62)
32. எருமை மீது ஏற்றப்பட்ட
இறை ஊழியர் தேவசகாயம் எந்த
இடங்கள் வழியாக பத்மனாபபுரத்திற்குக் கொண்டு வரப்பட்டார்?
குழித்துறை, குன்னூர், நட்டாலம் (மாத-64)
33. "சகோதரர்களே, நீங்கள் எல்லா நாளும்
பூசுகின்ற மருந்தினை பூசாமல் விட்டதால் எனக்கு
சுகவீனமாக இருக்கிறது', என்று கூறிய இறை
ஊழியர் தேவசகாயத்திற்கு காவலர்கள் என்ன செய்தனர்?
கருஞ்சூரைப் பிரம்பு கொண்டு நன்றாக
அடித்து வழக்கத்தை விட அதிகமாக மிளகு
அரைத்துக் காயங்களில் தடவி, வெயிலில் உட்கார
வைத்தனர் (மாத-66)
34. இறை ஊழியர் தேவசகாயத்தை
தூக்கிலிட எவ்வாறு கொண்டு சென்றனர்?
பகிரங்கமாக அடித்து எருமைமேல் உட்கார
வைத்து கொண்டு சென்றனர் (மாத-66)
35. இறை ஊழியர் தேவசகாயத்தை
புலியூர்குறிச்சி காட்டில் உள்ள பாறையில் எவ்வாறு
உட்கார வைத்தனர்?
இரத்தம் வடிந்த காயங்களில்
நல்ல மிளகு அரைத்துப் பூசி
மதிய வெயிலில் உட்கார வைத்தனர். (மாத-67)
36. இறை ஊழியர் தேவசகாயத்தை
தூக்கிலிட யாரிடம் கொண்டு சென்றனர்?
ஆராச்சார் (தூக்கிலிடுபவர்) (மாத-68)
37. இறை ஊழியர் தேவசகாயத்தை
ஆராச்சார் எங்கு கட்டி வைத்தார்?
வீட்டு மாட்டுத் தொழுவத்திற்கு
அடுத்து நின்ற ஒரு பட்ட
வேப்ப மரத்தில் (மாத-68)
38. இறை ஊழியர் தேவசகாயத்தை
எந்தச் சிறைக்கு கொண்டு செல்லுமாறு அரசனிடமிருந்து
இறுதிக் கட்டளை வந்தது?
ஆரல்வாய்மொழிக் கோட்டை வாசல் சிறை
(மாத-73)
39. இறை ஊழியர் தேவசகாயத்தை
ஆரல்வாய்மொழிக் கோட்டை வாசலுக்கு அழைத்துச்
சென்று எந்த மரத்தின் கீழ்
விலங்கிட்டு கட்டி வைத்தனர்?
பூவரசு மரம் (மாத-73)
40. இறை ஊழியர் தேவசகாயத்தை
மக்கள் எந்த முறையில் வணங்கினர்?
மறைசாட்சி என்ற முறையில் (மாத-74)
41. அரசர் எத்தனை முறை
இறை ஊழியர் தேவசகாயத்தை கொலை
செய்ய ஆணையிட்டார்?
2
முறை (மாத-74)
42. இறை ஊழியர் தேவசகாயத்தை
அரசர் எங்கு கொண்டுச்சென்று சுட்டுக்
கொல்லும்படி ஆணையிட்டார்?
காற்றாடிமலை (மாத-75)
43. இறை ஊழியர் தேவசகாயம்
திருமுழுக்குப் பெற்று எத்தனை ஆண்டுகளுக்குப்
பிறகு கொல்லப்பட்டார்?
7
ஆண்டுகள் (மாத--77)
44. இறை ஊழியர் தேவசகாயம்
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
40
ஆண்டுகள் (மாத--77)
45. இறை ஊழியர் தேவசகாயம்
சிறைவாழ்வு தொடங்கி எத்தனை ஆண்டுகளுக்குப்
பின் கொல்லப்பட்டார்?
3
ஆண்டுகள் (மாத--77)
46. எத்தனைப் படைவீரர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தை
எத்தனை துப்பாக்கிகளால் சுட்டனர்?
3
பேர், 3 துப்பாக்கிகளால் (மாத-79)
47. இறை ஊழியர் தேவசகாயம்
இறக்கவில்லை என்று தெரிந்த பிறகு
எத்தனை துப்பாக்கிகளால் மீண்டும் சுட்டனர்?
2
துப்பாக்கிகளால் (மாத-79)
48. இறை ஊழியர் தேவசகாயத்தின்
உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது?
கோட்டாறு -தூய பிரான்சீசு சவேரியார்
பேராலயத்தின் பெரிய பீடத்தின் முன்பக்கம்
(மாத-80)
49. திருவிதாங்கோட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளுக்குத்
தண்டனையை நிறைவேற்றும் குடும்பத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஆராச்சார் (புஷ்-54)
50. பெருவிளையில் இறை ஊழியர் தேவசகாயத்தை
கொடுமைப்படுத்தும் பணி யாரிடம் கொடுக்கப்பட்டது?
ஆராச்சாரிடம் (புஷ்-61)
51. பெருவிளையில் ஆராச்சாரின் கீழ் தங்கியிருந்த இறை
ஊழியர் தேவசகாயம் யாருக்குக் கடிதம் மூலம் தனக்கு
நடந்ததையெல்லாம் தெரிவித்தார்?
டிலனாய் (புஷ்-62)
52. எத்தனை மாதங்கள் இறை
ஊழியர் தேவசகாயத்தின் கையையும், காலையும் இரும்புச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள்?
18
மாதங்கள் (நற்-36)
53. இறை ஊழியர் தேவசகாயம்
கொடுமைப்படுத்தப்பட்ட நாட்களில் இரகசியமாக வந்து அவரோடு இணைந்து
செபித்தவர் யார்?
வேதியர் ஒருவர் (நற்-69)
54. இறை ஊழியர் தேவசகாயத்திற்கு
அரசவையில் எதிர்ப்பை அதிகமாக்கிய நிகழ்வு எது?
"பூணூல்' விவாதம் (நற்-71)
55. இறை ஊழியர் தேவசகாயம்
கைது செய்யப்பட்டபோது அவரது காரியத்தில் தலையிட
வேண்டாம் என யாரை அரசர்
கேட்டுக் கொண்டார்?
டிலனாய் (நற்-96)
56. இறை ஊழியர் தேவசகாயம்
சிறையில் வாடிய நாட்களில் கிறித்தவர்களின்
தலைவர்களாக இருந்தவர்கள் யார்?
வேதியர்கள் (நற்-108)
57. இறை ஊழியர் தேவசகாயத்தை
விடுவிக்க வேதியர்கள் யாரிடம் சென்று முறையிட்டனர்?
இளவரசர் ராமவர்மா (நற்-108)
58. வட திருவிதாங்கூர் படைமுகாம்களிலிருந்து
மன்னர் திரும்பும் வரை எதிரிகள் தேவசகாயத்திற்கு
எதிராகக் கிளப்பிவிட்ட வதந்தி எது?
"கிறித்தவ விசுவாசத்தைக் கைவிடாத காரணத்திற்காக இறை
ஊழியர் தேவசகாயம் கொலைக்களத்தில் கொல்லப்பட்டார்' (நற்--108)
59. இறை ஊழியர் தேவசகாயம்
தன் அவமானப் பவனியின்போது யாரிடம்
வாக்குவாதம் செய்து கிறித்தவத்தின் உண்மையை
உணரச் செய்தார்?
ஆளுநர்கள் (நற்-113)
60. இறை ஊழியர் தேவசகாயத்தின்
அவமானப் பவனி எத்தனை நாட்கள்
நீடித்தது?
16-
நாட்கள் (நற்-114)
61. இறை ஊழியர் தேவசகாயத்தின்
மீது காவலர்கள் இரக்கம் காட்டி தப்பிச்
செல்ல கனிவுடன் வாய்ப்பளித்த இடம் எது?
பெருவிளை.
62. இறை ஊழியர் தேவசகாயம்
இறுதியாக அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை எது?
ஆரல்வாய்மொழி கோட்டைவாசல் சிறைச்சாலை (நற்-124)
63. இறை ஊழியர் தேவசகாயம்
எங்கெல்லாம் சிறைவைக்கப்பட்டார்?
பத்மனாபபுரம், குழித்துறை, திருவிதாங்கோடு, பெருவிளை மற்றும் ஆரல்வாய்மொழி (மிக்-144)
64. இறை ஊழியர் தேவசகாயத்தை
எந்த இடங்களின் வழியாக குழித்துறையிலிருந்து திருவிதாங்கோடு சிறைக்குக்
கொண்டு செல்ல தளவாய் இராமையன்
ஆணையிட்டான்?
குன்னத்தூர், முஞ்சிறை, கைச்சூண்டி, பார்த்திபப்புரம், திருமலை, புதுக்கடை, கருக்கி, கொல்லஞ்சி, நட்டாலம், முருங்கவிளை, கப்பியறை, செல்லங்கோணம், மாங்கோடு வழியாக (மிக்-110)
65. இறை ஊழியர் தேவசகாயம்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் மலையில் என்ன
நிகழ்ந்தது?
கல் ஒன்று பெயர்ந்து
விழுந்து தேவசகாயத்தின் மரணத்தை அறிக்கையிடுவது போன்று
மணியோசை எழுப்பியது (மிக்-133)
66. இறை ஊழியர் தேவசகாயம்
திருவிதாங்கோடு சிறையில் காவல் வைக்கப்பட்டிருந்த போது
அவரை துன்புறுத்தும் அதிகாரம் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
கப்பியறை அதிகாரி (மிக்-115)
67. சாவுக்கு தீர்ப்பிடப்பட்டவரை ஆராச்சார் எப்படிக் கொல்வது வழக்கம்?
சிரச்சேதம் செய்து அல்லது கழுவில்
ஏற்றி (மிக்-119)
68. இறை ஊழியர் தேவசகாயம்
பத்மனாபபுரம் சிறையிலிருந்து குழித்துறை சிறைக்கு எந்த இடங்களின் வழியாக
கொண்டு செல்லப்பட்டார்?
மேலாங்கோடு, மணலிக்கரை, திருவட்டார், திக்குறிச்சி (மிக்-105)
69. இறை ஊழியர் தேவசகாயத்தை
எந்தெந்த மரங்களில் எங்கெங்கு கட்டி வைத்தார்கள்?
பட்ட வேப்ப மரம் - பெருவிளையில் ஆராச்சாரிடம் ஒப்படைத்த
பின்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட மரம் (மிக்-118)
பூவரச மரம் - ஆரல்வாய்மொழியில்
கட்டி வைக்கப்பட்ட
மரம் (மிக்-123)
70. கசையடிகள் பெற்ற இறை ஊழியர்
தேவசகாயத்தின் உடலில் எத்தனை வடுக்கள்
காணப்பட்டதாக பணி. புத்தாரி தன்
கடிதத்தில் எழுதியுள்ளார்?
32
வடுக்கள் (நற்-112)
71. இறை ஊழியர் தேவசகாயம்
கல்குளம் தாலுகா அதிகாரியின் தண்டனையைப்
பெற்ற நாட்கள் யாவை?
கி.பி.1750 சனவரி
23 முதல் பிப்ரவரி 23 வரை (அந்-15)
72. இறை ஊழியர் தேவசகாயம்
அகஸ்தீஸ்வரம் தாலுகா அதிகாரியின் தண்டனையை
எப்போது பெற்றார்?
கி.பி.1750 பிப்ரவரி
24 முதல் மார்ச் 24 வரை (அந்-15)
73. தோவாளை தாலுகா அதிகாரியின்
தண்டனையை இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது பெற்றார்?
கி.பி.1750 மார்ச்
25 முதல் ஏப்ரல் 26 வரை (அந்-15)
74. கி.பி.1750 ஏப்ரல்
27 முதல் மே 26 வரை இறை
ஊழியர் தேவசகாயம் எந்த தாலுகா அதிகாரியின்
தண்டனைக்கு ஆளானார்?
விளவங்கோடு தாலுகா (அந்-15)
75. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது நெய்யாற்றின்கரை தாலுகா அதிகாரியின் தண்டனைக்கு
ஆளானார்?
கி.பி.1750- மே
28 முதல் சூன் 27 வரை (அந்-15)
76. இறை ஊழியர் தேவசகாயம்
எப்பொழுது நெடுமங்காடு தாலுகா அதிகாரியின் தண்டனைக்கு
ஆளானார்?
கி.பி.1750 சூன்
28 முதல் சூலை 29 வரை (அந்-15)
77. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது சிறையின் கீழ் தாலுகா அதிகாரியின்
கொடுமைகளை சந்தித்தார்?
கி.பி.1750 சூலை
30 முதல் ஆகஸ்டு 31 வரை (அந்-15)
78. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது திருவனந்தபுரம் தாலுகா அதிகாரியின் கொடுமைக்கு
ஆளானார்?
கி.பி.1750 செப்டம்பர்
1 முதல் 30 வரை (மாத-15)
79. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது பத்மனாபபுரம் சிறையிலும், மணலி சுண்ணாம்புச் சூளையிலும்
அடைக்கப்பட்டார்?
கி.பி.1750 அக்டோபர்
முதல் நவம்பர் முடிய 2 மாதங்கள்
(அந்-15)
80. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது புலியூர்குறிச்சியிலும், பெருவிளை ஆராச்சாரின் சிறைச் சாலையிலும் இருந்தார்?
கி.பி. 1750 டிசம்பர்
முதல் 1751 மே முடிய (அந்-15)
81. இராமன்புதூர் சிறையில் இறை ஊழியர் தேவசகாயம்
எவ்வளவு காலம் இருந்தார்?
கி.பி.1751 சூன்
முதல் ஆகஸ்ட் முடிய (அந்-15)
82. இராமன்புதூர் சிறையில் நடந்த சிறப்பு நிகழ்வு
என்ன?
இயேசு சபைத் தலைவர்
இறை ஊழியர் தேவசகாயத்தின் கைவிலங்கை
முத்திச் செய்து ஆசி பெற்றார். (அந்-15)
83. இறை ஊழியர் தேவசகாயம்
ஆரல்வாய்மொழி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலம் யாது?
கி.பி.1751 செப்டம்பர்
முதல் 1752 சனவரி 13-ஆம் நாள் வரை
(அந்-15)
84. இறை ஊழியர் தேவசகாயம்
எப்போது கைது செய்யப்பட்டார்?
கி.பி.1748 டிசம்பர்
(அந்-77)
85. இறை ஊழியர் தேவசகாயத்தின்
கைகளில் விலங்கு பூட்டி சிறையில்
அடைத்த நாள் எது?
கி.பி.1749 -பிப்ரவரி
23 (அந்-83)
86. இறை ஊழியர் தேவசகாயம்
எந்த நாளில் கல்குளம் தாலுகாவிலுள்ள
காரியக்காரர்களின் தீர்ப்பிற்காக பத்மனாபபுரத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்?
கி.பி. 1750 சனவரி
3 (அந்-95)
87. இறை ஊழியர் தேவசகாயம்
விசாரணைக்காக எத்தனை தாலுகா அதிகாரிகளிடம்
கொண்டு செல்லப்பட்டார்?
8
(அந்-95)
88. இறை ஊழியர் தேவசகாயம்
எந்தெந்த தாலுகா அதிகாரிகளிடம் விசாரணைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டார்?
1. தோவாளை
2. அகஸ்தீஸ்வரம்
3. கல்குளம்
4. விளவங்கோடு
5. நெய்யாற்றின்கரை
6. திருவனந்தபுரம்
7. நெடுமங்காடு
8. சிறையின்
கீழ் (அந்-94)












0 comments:
Dí lo que piensas...